அருள்மிகு படவேட்டம்மன் ஆலயத்தில் வினைகள் நீக்கும் விளக்கு பூஜை... நீங்களும் கலந்துகொள்ள அழைக்கிறோம்!

Jun 13, 2026 - 09:30
0
அருள்மிகு படவேட்டம்மன் ஆலயத்தில் வினைகள் நீக்கும் விளக்கு பூஜை... நீங்களும் கலந்துகொள்ள அழைக்கிறோம்!

அனைவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும் வந்துபோகும். இன்பம் வரும்போது அதை அனுபவிக்கும் பலரும் துன்பம் வரும்போது துவண்டுவிடுகிறார்கள். அதை எதிர்கொள்ளத் தெரியாமல் தவித்து தவறான பாதையில் சென்றுவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் அனைத்தையும் இயல்பாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெற நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகம் தேவை. அதை நமக்கு வழங்குவது தீப வழிபாடு.

வீட்டில் தினமும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும். அப்படி விளக்கேற்றி வழிபாடு செய்யச் செய்ய வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. தெய்வ கடாட்சம் பெருகும் என்பார்கள்.

தீபத்தில் தெய்வம் எழுந்தருளும். தீபத்தையே தெய்வமாகக் காண்பது ஞானத்தின் உயர் வடிவம். கோயில்களில் இருக்கும் தெய்வங்களை பூஜை செய்ய ஆகம விதிகள் கடுமையான நியமங்களைச் சொல்லியிருக்கின்றன. எனவே அனைவருக்கும் அந்த வாய்ப்பு இல்லை. மாறாக தீபமேற்றினால் தெய்வம் அதில் எழுந்தருளும். நாம் அதற்கு உரிய பூஜைகளைச் செய்து வழிபடலாம். நம் கரத்தால் சுவாமிக்கு அம்பாளுக்கு வழிபாடு செய்த பாக்கியமும் திருப்தியும் உடனடி காரிய வெற்றியும் கிடைக்கும்.

விளக்கு பூஜையை மக்கள் கூடி ஓரிடத்தில் செய்வது மிகவும் விசேஷம். கூட்டுபிரார்த்தனை அளவிடமுடியாத நற்பலன்களைக் கொடுக்கும். ஒவ்வொருவரின் வேண்டுதலும் வேறுவேறு என்றாலும் அத்தனையையும் அம்பாள் ஆசீர்வாதம் செய்து விரைவில் நடைபெற அருள்வாள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த விளக்கு பூஜையை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை அருள்மிகு படவேட்டம்மன் ஆலயத்தில் வரும் 19.6.26 அன்று நடைபெற இருக்கிறது.

படவேட்டம்மன் ஆலயங்கள் பல நம் நாட்டில் உள்ளன. ஆனால் ஆரணி அருகே இருக்கும் படவேடுதான் முதல் தலம். அடுத்த சிறப்பினை உடையது ஜமீன் ராயப்பேட்டை ஆலயம்தான் என்கிறார்கள் பக்தர்கள்.

படவேட்டம்மன் அருளும் பிற ஆலயங்களில் அம்மனின் திருமேனிக்குக் கீழ் ஒரு திருமுகம் மட்டுமே இருக்கும். ஆனால் ஆரணி ஆலயத்தில் இரண்டு முகங்கள் உண்டு. அதேபோன்று ஜமீன் ராயப்பேட்டை ஆலயத்திலும் அம்பிகை இரண்டு திருமுகங்களோடு அருள்கிறாள்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

இந்த ஆலயத்துக்குள் பிரச்னையோடு வருபவர்கள் தங்கள் கவலைகள் தீர்ந்து புது நம்பிக்கயோடு செல்வார்கள் என்கிறார் இந்தக் கோயிலின் குருக்கள்.

"இந்த ஆலயத்தில் இருக்கும் அத்திமர அம்மன் திருமேனிகள் மகத்துவம் வாய்ந்தவை. அந்தத் திருமேனியைக் கையில் ஏந்தும்போதே நம் உடல் சிலிர்க்கும் என்கிறார்கள் பக்தர்கள். ஒரு சிலர் அதை ஏந்தியதும் அம்மனின் அருளால் ஆட்கொள்ளப்படுவதையும் கண்டிருக்கிறோம். அந்தத் திருமேனியைச் சுமந்துகொண்டு அம்மனின் சந்நிதியை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும்போது அன்னையின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே வலம் வர வேண்டும். மூன்று முறை வலம் வந்து திருமேனியை இறக்கிவைத்து வேண்டிக்கொள்ள மனக்கவலைகள் நீங்கும். குறிப்பாக ஏதேனும் வேண்டுதல்கள் இருந்தால் அவை விரைவில் நிறைவேறும்.

நிறையபேர் தொழில் தடை, வேலையின்மை, கடன்பிரச்னை. எதிரிகளின் தொல்லை ஆகியவற்றால் அவதிப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்தப் பிரார்த்தனைகளைச் செய்ய சகலவிதமான கஷ்டங்களும் நீங்கும். வாழ்வில் புதிய ஒளி தோன்றும். செல்வமும் புகழும் தேடிவரும். அப்படி வளமுடன் வாழும் அநேகர் தினமும் நன்றியோடு இந்த ஆலயம் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் தை மாதம் நடைபெறும் மங்கள சண்டி ஹோமம் இங்கே விசேஷமாக நடைபெறும். அதேபோன்று ஆடி மாதத் திருவிழா இங்கே பிரம்மோற்சவமாக நடைபெறும். ஆடி மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி நடைபெறும் இந்த விழாவில் தீ மிதித் திருவிழா நடைபெறும். அதில் பக்தர்கள் பக்தியுடன் கலந்துகொள்வார்கள். அந்த நாள்களில் அம்மனின் சாந்நித்தியம் மிகவும் அதிகமாக இருப்ப பக்தர்கள் கண்ணாறக் காண்பார்கள். அப்போது வேண்டிக்கொள்ளும் செயல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை" என்கிறார் குருக்கள் அஷ்வின்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

இந்த அற்புதத்தலத்தில்தான் வரும் ஜூன் 19 -ம் தேதி சக்தி விகடனும் குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் கோயில் நிர்வாகமும் இணைந்து சிறப்பு விளக்கு பூஜையை நடத்த இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட வாழ்க்கை வளமாகும். அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். பிள்ளைகளின் கல்வி, தொழில், வேலை, திருமணம் போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாருங்கள் அற்புதமான அந்த அன்னையின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம்.

சக்தி விகடன் மற்றும் ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்ஸர் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ். மேலும் இந்த நிகழ்வை தீபம் லேம்ப் ஆயில், சக்தி மசாலா மற்றும் கோபுரம் மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள்.

விளக்கு பூஜை
விளக்கு பூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

விளக்குபூஜை

* படிவத்தில் உங்கள் தகவல்களைப் பதிவு செய்தலே போதுமானது. உங்கள் வருகை உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே வேறு பதில் செய்தி ஏதும் வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். ஆலய வளாகத்தில் சந்திக்கலாம். நன்றி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User