வீவ்ஸ் & வொண்டர்ஸ்’26 : RmKV-யின் புதிய கலெக்சன் அறிமுகம்!
நூற்றாண்டுக்கும் மேலாக, தனித்துவமான பட்டுப் புடவைகளுக்காகவும், கைத்தறித் துறைக்கான சிறப்பான அர்ப்பணிப்பிற்காகவும் ஆரெம்கேவி சில்க்ஸ் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த மரபைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஹம்ச தமயந்தி, கிராண்ட் ரிவர்சிபிள் சாரி மற்றும் உலகின் முதல் மிக நீளமான தீம்-சில்க் புடவை உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட புதுமையான படைப்புகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பழங்கால நுட்பங்களையும் 100-க்கும் மேற்பட்ட இயற்கைப் பொருட்களையும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கைச் சாயமிட்ட பட்டுப் புடவைகள், காப்புரிமை பெற்ற 40% எடை குறைந்த ‘லினோ’ பட்டுப் புடவைகள், உலகின் பல்வேறு நாகரிகங்களின் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியத்தால் ஈர்க்கப்பட்ட தீம் புடவைகள் ஆகியவற்றிற்காகவும் ஆரெம்கேவி தனித்துவமானது. முன்னோடியான வடிவமைப்புகளும் மேம்பட்ட நெசவு நுட்பங்களும் ஆரெம்கேவி நிறுவனத்திற்கு இரண்டு தேசிய விருதுகள், கின்னஸ் உலக சாதனை மற்றும் பல காப்புரிமைகளை பெற்று தந்துள்ளன. சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் கிளைகளை கொண்டுள்ள ஆரெம்கேவி, இந்தியக் கைத்தறித் துணிகளின் செழுமையான பாரம்பரியத்தைத் தொடர்ந்து கொண்டாடிப் பாதுகாத்து வருகிறது.
ஆரெம்கேவி 102-வது ஆண்டில், இந்தப் பண்டிகைக் காலத்தில் 18 புதிய புதுமையான பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்துகிறது. சென்னையில் நடைபெறும் ‘வீவ்ஸ் & வொண்டர்ஸ்’ என்ற சிறப்புக் கண்காட்சியில், பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்தப் படைப்புகளின் கருத்தாக்கங்களை (concept) நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

கண்காட்சியில் இடம்பெறும் முக்கியப் புடவைகள்:
ராகமாலா
இசை, கலை மற்றும் நெசவு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பட்டுப் புடவை. இதன் முந்தானையில் 16–19ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எட்டு ராகமாலா ஓவியங்கள் நெய்து மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் தோடி, வசந்தா, கௌரி ராகிணி ஆகிய. ஒவ்வொரு ஓவியமும் அதற்குரிய ராகத்தின் தனித்துவமான இயல்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பட்டு புடவை.
கற்பவிருட்சம்
வளர்ச்சியையும் உறவுகளையும் அடையாளமான புராணகால வாழ்வின் மரமான கற்பவிருட்சத்தை மையமாகக் கொண்ட இந்தப் புடவையின் முந்தானை, விரிந்து பரவும் மரக்கிளைகளை கைத்தறியில் நெய்து கண்கவர் வகையில் நெய்யப்பட்டு மேலும். செழுமையான மலர் வடிவ ஜரி புட்டாக்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சம் ஜப்பானியத் தொகுப்பு. இதில் ஜப்பானின் கலை, குறியீடுகள் மற்றும் கைவினை மரபுகளைப் பட்டில் RmKV மறுவடிவமைத்துள்ளது.
குறிப்பிடத்தக்க புடவைகள்:
சஷிகோ–காசுதி ரிவர்சிபிள்
இரு நெசவு மரபுகளின் சங்கமமாக அமைந்துள்ள இருபுறமும் அணியக்கூடிய புடவை, கர்நாடகத்தின் காசுதி எம்பிராய்டரியையும் ஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரியையும் ஒன்றிணைக்கிறது. ஒரு பக்கம் பச்சை நிறத்தில் இளஞ்சிவப்பும், மறுபக்கம் மெஜந்தா நிறத்தில் பச்சையும் இடம்பெற்றுள்ளன. இரு பக்கங்களிலும் அணியக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பான பட்டுபுடவை.
ஜப்பானிய இண்டிகோ நேச்சுரல்ஸ்
இயற்கை இண்டிகோ சாயத்தில் உருவாக்கப்பட்ட புடவையில், ஜப்பானியக் கலையிலிருந்து கிமோனோ அணிந்த பெண்களின் உருவங்கள் நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் ஃபுரிசோடே, ஒபி மற்றும் காஞ்சாஷி அலங்காரங்கள் நுட்பமாக நெய்யப்பட்டுள்ளன. சகுரா மலர்களின் அடுக்குக்குக்கீழே பிஷாமோன், கிக்கோ மற்றும் ஹனாபிஷி வடிவங்கள் இவற்றைச் சுற்றி அமைந்துள்ளன.
வுட்பிளாக் லினோ
ஜப்பானிய மரஅச்சுக் கலையைப் போற்றும் இந்த லினோ புடவையின் முந்தானையில், புகழ்பெற்ற கலைஞர் கவாசே ஹசுய் உருவாக்கிய ‘ஷிபா பென்டன் இக்கே’ ஓவியம் மீண்டும் நெய்து உருவாக்கப்பட்டுள்ளது. இது அமைதியான கோயில் குளத்தின் அழகைப் படம்பிடிக்கிறது.
மற்ற தீம் புடவைகள்:
கூரை கட்டம்
பாரம்பரிய கூரை கட்டம் வடிவமும், ஆரஞ்சு மற்றும் துரு நிறப் புடவையில் ஜரி பொன் புட்டாக்கள் இடம்பெற்றுள்ளன. கொடி விசிறி மற்றும் தேன் துளி வடிவங்கள் கொண்ட பச்சை நிற பார்டர் இதற்கு நிறைவளிக்கிறது.
பெல் ஜால் லினோ
மீனாகாரி பெல் ஜால் எனப்படும் கொடி வலைப்பின்னல் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த லினோ புடவை, முகலாயக் கலை வடிவங்களுடன் அழகிய மலர் வடிவங்களைக் கொண்ட அடர் சிவப்பு பார்டருடன் அமைந்துள்ள அழகிய பட்டுபுடவை.

இரட்டைக் கிளி
தமிழ் நெசவு மரபில் விரும்பிப் பயன்படுத்தப்படும் இரட்டைக் கிளி வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கோர்வை புடவை, MS நீல நிறத்தில் அமைந்துள்ளது. குயில்கண், வங்கி, மயில் மற்றும் யானை போன்ற பாரம்பரிய வடிவங்களோடு உருவாக்கப்பட்ட அற்புத படைப்பு.
பூ தோரணம்
பூ தோரணத்தின் வடிவமைப்போடு, கோர்வை முறையில், மாலை–காலை பார்டர். மேல்புற விளிம்பிலிருந்து ஜரியில் நெய்யப்பட்ட வடிவம் கீழிறங்குகிறது. மாறுபட்ட வாடாமல்லி நிற பார்டரில் யாழி, அன்னம் மற்றும் வங்கி வடிவங்கள் இடம்பெற்று, முந்தானையிலும் வடிவமைக்கப்பட்ட சிறப்பான பட்டு புடவை.
பூ கோபுரம்
கோயில் கோபுரத்தின் வெளிவடிவமும், அதன் அடுக்குகளை மலர் அமைப்பாக மறுவடிவமைக்கிறது. கார்னேஷன் மலர்கள் மற்றும் சாமந்திப் பூ புட்டாக்களுடன் கைத்தறியில் நெய்யப்பட்டுள்ள பாரம்பரிய அரைப்-பாதி புடவை. காலத்திற்கேற்ற புதுமை படைப்பு.
மயில் துத்தம் கோர்வை
மயில் துத்தம் நிறத்தைக் கொண்ட கோர்வை புடவையில் லட்டு கமலம், ஜடை நாகம், வங்கி மற்றும் குயில்கண், போன்ற தமிழ் நெசவு மரபில் வேரூன்றிய வடிவங்கள் இடம்பெற்று, முந்தானை முழுவதும் தொடரும் வண்ணம் நெய்த அழகிய பட்டு புடவை.
கோல்டன் காகோமே ⚠
ஜப்பானிய அழகியல் மரபோடு நெய்யப்பட்ட புடவையில், கரகுசா மலர்-கொடி வடிவங்களுடன் தீமையைத் தடுக்குமென நம்பப்படும் மூங்கில் வலைப்பின்னல் வடிவமான காகோமே இணைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் அரச குடும்பத்துடன் தொடர்புடைய கிரிசாந்தமம் மலர்களும் புடவையின் உடற்பகுதி முழுவதும் மலர்கின்றன.
ஜப்பானிய பிஜிங்கா
எடோ காலத்தில் அழகிய பெண்களைச் சித்தரிக்கும் பிஜிங்கா கலைவடிவத்தின் பெயரைக் கொண்ட இந்தப் புடவையில், அந்த உருவங்கள் உலோக நூல் நெசவால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேக வடிவங்களை மையமாகக் கொண்ட முந்தானையைச் சுற்றி காமோன் குடும்பச் சின்னங்கள் இடம்பெறுகின்றன. இது புகழ்பெற்ற ஜப்பானியக் கலைவடிவத்தோடு கூடிய பட்டுபுடவை.
முப்பாகம் நேச்சுரல்ஸ்
கடுக்காய், இண்டிகோ, அரக்கு, பட்டை, மரம் மற்றும் இந்திய மஞ்சிட்டி ஆகிய இயற்கைப் பொருட்களால் சாயமிடப்பட்ட இந்த முப்பாகம் புடவையில் கிளி வடிவங்கள் கொண்ட விவா மெஜந்தா நிறப் பகுதி, கட்டம் போட்ட பகுதிகளால் இருபுறமும் சூழப்பட்டுள்ளது.
கிளி கொடி லினோ
காப்புரிமை பெற்ற லினோ நெசவின் 40% எடை குறைவான இலகுத்தன்மையைப் பயன்படுத்தும் புடவையில், மீனாகாரி முறையில் நெய்யப்பட்ட கொடி வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. ஜடை நாகம் மற்றும் அரைமடம் வடிவங்கள் இதனைச் சுற்றி அமைந்துள்ளன.
செவ்வந்தி கட்டம்
செவ்வந்திப் பூவின் பெயரைக் கொண்ட இந்த ஆரஞ்சு மற்றும் மெரூன் நிறப் புடவையில், பெரிய ஜரி கட்டங்களுக்குள் முத்துக் கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்னம் மற்றும் சக்கரம் புட்டாக்கள் இடையிடையே இடம்பெற்று, அடர் சிவப்பு தாமரை பார்டருடன் கூடிய அழகிய பட்டு புடவை.
மெட்ராஸ் கட்டம்
காலத்தால் அழியாத மெட்ராஸ் கட்டம் வடிவத்தின் நவீன வடிவமாக டர்காய்ஸ் நிறப் புடவை உருவாக்கப்பட்டுள்ளது. ஜரி மற்றும் பட்டில் கைத்தறியில் நெய்யப்பட்ட கட்டங்களுடன், திலகம், ருத்ராட்சம், துத்திரிப்பூ மற்றும் சீப்புமரக்கு வடிவங்கள் கொண்ட மாறுபட்ட இளஞ்சிவப்பு முந்தானையோடு கூடிய அற்புத பட்டு புடவை. ⚠
கோல்டன் பேர்ல் கட்டம்
வேல்தாரியின் நான்கு மாறுபாடுகளைக் கொண்ட இந்த ஆஃப்-வைட் கட்டம் புடவையில், கிடைமட்டக் கோடுகளில் லட்டு கமலம், நெளி மற்றும் வைரம் வடிவங்களும், செங்குத்துக் கோடுகளில் துத்திரிப்பூ மற்றும் பம்பரம் வடிவங்களும் நெய்யப்பட்டுள்ளன. இவை மெரூன் நிற பார்டருக்குள் அமைந்துள்ள சிறப்பான பட்டுபுடவை. ⚠
இந்தக் கண்காட்சியில், மெட்ராஸ் கட்டம், கோல்டன் பேர்ல் கட்டம், கூரை கட்டம் மற்றும் செவ்வந்தி கட்டம் ஆகிய புடவைகளின் வழியாக மெட்ராஸ் கட்டம் வடிவத்தை ஆரெம்கேவி தொடர்ந்து ஆராய்ந்து மறுவடிவமைக்கும் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு புடவையும் பாரம்பரிய கட்டம் வடிவங்களில் வேரூன்றி, செம்மையான தமிழ் நெசவு மரபிலிருந்து பெறப்பட்ட வடிவங்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் செழுமையான நெசவு மரபை உருவாக்கிய பாரம்பரியங்களில் ஆழமாக வேரூன்றியபடியே, கைத்தறிப் புதுமையின் எல்லைகளை ஆரெம்கேவி தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)