"படம் ஹிட் ஆகும் என நம்பிக்கையாக இருந்தோம்; ஆனால், ஓடாததற்கு..." - ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான்!

May 13, 2026 - 15:31
0
"படம் ஹிட் ஆகும் என  நம்பிக்கையாக இருந்தோம்; ஆனால், ஓடாததற்கு..." - ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான்!

ஆமிர் கானின் மகனான ஜூனைத் கான் நடித்திருந்த 'ஏக் தின்' திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதான் சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ek Din
Ek Din

திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்குப் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படியான வரவேற்பு பற்றி ஜூனைத் கானே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், "படம் தோல்வியடைந்தாலும், தயாரிப்பாளராக ஆமிர் கான் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார். அப்பா எப்போதுமே ஒரு விஷயத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார்.

படம் ஓடவில்லை என்றால் அவருக்கு இப்போதும் வருத்தம் ஏற்படும். ஆனால், உடனே அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார். அப்பா எனக்காகப் படம் எடுக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை.

அவர் இப்போது இருக்கும் இடத்திற்கு ஐந்து வருடத்திற்கு ஒரு படம் எடுத்தால்கூட போதும். ஆனால், நான் இப்போதுதான் வளர்ந்து வருகிறேன். எனக்குத் தொடர்ந்து நிறைய படங்கள் தேவைப்படுகின்றன.

Junaid Khan
Junaid Khan

ஆமிர் கான் புரொடக்ஷன்ஸில் ஒரு படம் உருவாவதற்கு ஐந்து வருடங்கள் கூட ஆகலாம். அவ்வளவு காலம் என்னால் காத்திருக்க முடியாது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடுதான் இருந்தோம்.

ஆனால், படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. சில நேரங்களில் இப்படி நடப்பது சகஜம்தான். அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான், நான் அதில் ரசித்து நடித்தேன்.

நாங்கள் அனைவரும் அந்தப் படத்தை ரசித்தே உருவாக்கினோம். சொல்லப்போனால், பலருக்கும் அந்தப் படம் பிடித்திருந்தது, ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User