பொன்மழை பொழியச் செய்த பெருந்தேவித் தாயார் சந்நிதியில் திருவிளக்கு பூஜை... கலந்துகொள்ள அழைக்கிறோம்!

Jul 22, 2026 - 13:01
0
பொன்மழை பொழியச் செய்த பெருந்தேவித் தாயார் சந்நிதியில் திருவிளக்கு பூஜை... கலந்துகொள்ள அழைக்கிறோம்!

மகாலட்சுமித் தாயாரை மனதார வழிபட்டால் நம் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. மகான் ஆதிசங்கரர் மனம் உருகித் தாயாரை கனகதாரா ஸ்தோத்திரம் பாடித் துதித்தபோது அன்னை பொன்மழை பொழிந்தாள். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் வித்யாரண்யர் என்னும் மகான் ஒருவருக்காக அன்னை பொன்மழை பொழிந்தாள். பிற்காலத்தில் சனாதன தர்மம் நிலைத்து நிற்க அந்த செல்வம் உதவியது வரலாறு. அதேபோன்று ஒரு சம்பவம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நிகழ்ந்தது. அதை நிகழ்த்தியவர் பெருந்தேவித் தாயார்.

ஸ்ரீவேதாந்த தேசிகர் மாபெரும் ஞானியாகத் திகழ்வதைக் கண்டு பொறுக்கமுடியாத சிலர் அவர் மீது பொறாமைகொண்டனர். அவரை அவமானப்படுத்த எண்ணினர். ஒருமுறை காஞ்சிக்கு வந்த பிரமச்சாரியான வறியவன் ஒருவனை ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் சென்று பொருள் வேண்டும்படி ஏவினர். அவனும் சென்றான். கயவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட தேசிகர், ஸ்ரீபெருந்தேவித் தாயாரை வேண்டி ஸ்ரீதுதி பாடினார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீதாயார், பொன் மழை பெய்வித்து தேசிகரின் பெருமையை உலகறியச் செய்தாராம்.

அமைந்தகரை வரதராஜபெருமாள் கோயில்

அப்படிப்பட்ட அன்னையின் சந்நிதி ஒன்று அமைந்தகரையிலும் இருக்கிறது. அமைந்தகரையில் அருள்மிகு வரதராஜப் பெருமாள் பெருந்தேவித் தாயாருடன் எழுந்தருளி அருள்பாலித்துவருகிறார். இந்தக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நம் கருத்தைக் கவரும் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தை வணங்கி ஆலயத்துள் பிரவேசிக்கலாம். ராஜகோபுரத்தைத் தொடர்ந்து பலிபீடம், த்வஜஸ்தம்பம் (கொடிமரம்), கருடாழ்வார் சந்நிதிகள் அமைந்துள்ளன.

முகமண்டபத்தின் மேற்பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மகாவிஷ்ணு, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் வரதராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். சுவாமியின் தரிசனமே பக்தர்களின் மனதை சாந்தப்படுத்தி நிம்மதியை அருள்கிறது. கவலைகள் மறைந்துபோகின்றன. வரம் தரும் அந்த நாயகனின் திருவடி முதல் மகுடம் வரை தரிசனம் மனத்துள் மகிழ்ச்சி பொங்குகிறது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

வெளிப்பிராகாரத்தில் பெருந்தேவி தாயார் சந்நிதி. இந்தச் சந்நிதியில் பிரசாதமாக வழங்கப்படும் மஞ்சள் வினைதீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது. மேலும் இந்த மஞ்சளைத் தொடர்ந்து இட்டுக்கொண்டு வந்தால் செல்வவளம் சேர்வதோடு ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும் என்கிறார்கள்.

கருவறையின் வடக்குப் புறச் சுவரில் மகாலட்சுமி, பதினாறு கரங்களுடன் மகாவிஷ்ணு, நரசிம்மர் ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் கிழக்கு நுழைவாயிலின் வலப்புறத்தில் பரமபத வாசல் அமைந்துள்ளது.

அமைந்தகரை வரதராஜபெருமாள் கோயில்

அற்புதமான இத்தலத்தில் நடைபெறும் வழிபாடுகள் மிகவும் விசேஷமானவை. அதிலும் ஒவ்வொரு புதன் கிழமையும் காலையும் மாலையும் நடைபெறும் ச்ரி விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை இத்தலத்தின் தனிச்சிறப்பாகத் திகழ்கிறது. இதில் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டால் திருமணவரம் கிடைக்கும். குடும்பக் கஷ்டங்கள் தீரும். தொழில் அல்லது வேலையில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். புத்திர பாக்கியமும் கிட்டும் என்கிறார்கள்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

இத்தகைய பெருமையும் சிறப்பும் உடைய திருத்தலத்தில்தான் சக்திவிகடனும் ச்ரி வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து வரும் 24.7.26 வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்குபூஜை நடத்த இருக்கிறார்கள். ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். அப்படிப்பட்ட ஆடி மாதத்தில் அன்னை பெருந்தேவித்தாயார் குடிகொண்டிருக்கும் திருக்கோயிலில் நடைபெறும் விளக்குபூஜை வைபவத்தில் பங்குபெறுவது மிகவும் சிறப்பானது. நம் கவலைகளைத் தீர்ப்பது. வேண்டுதல்களை நிறைவேற்றுவது. எனவே வாய்ப்பிருக்கும் வாசகிகள் இந்த விளக்குபூஜை வைபவத்தில் கலந்துகொள்ளுங்கள். இதற்குப் பதிவு செய்தால் போதுமானது. (பதிவுக்குப் பின் வேறு எந்த உறுதிப்படுத்தும் செய்தியும் வராது என்பதால் கவலைப்பட வேண்டாம். நேரடியாக நிகழ்வு நடைபெறும் ஆலயத்துக்கு வந்துவிடலாம். விளக்கு பூஜை வைபவம் சரியாக மாலை 6 மணிக்குத் தொடங்கும்.

விளக்குபூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User