திருமணம் தள்ளிப்போகிறதா... மதுரையில் நடக்கும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!
மதுரையில் வரும் 17 ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்த நாளில் லட்சக்கணக்கானவர்கள் மதுரையில் திரள்வார்கள். அப்படிப்பட்ட புண்ணியமான நாளில் விகடனும் வாசகர்களின் நன்மையை முன்னிட்டு விரைவில் திருமண வரம் அருளும் சுயம்வர பார்வதி ஹோமத்தை மதுரை மண்ணில் நடத்த இருக்கிறோம்.
இந்த வைபவத்தை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பினர் மற்றும் தமிழ் மேட்ரிமோனியும் இணைந்து வழங்குகிறார்கள்.
சுயம்வர பார்வதி ஹோமம் என்பது திருமண வரம் தரும் ஹோமம். ஏன் இந்த ஹோமம் தற்காலத்தில் அவசியமாகிறது? இன்றைக்கு திருமண வயதைக் கடந்தும் பலருக்கும் மணவாழ்க்கை அமையாது கஷ்டப்படுகிறார்கள். அதற்குப் பல காரணங்கள், காரணிகள். இவை தவிர்த்து ஜாதக காரணங்களும் உண்டு. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், புத்ர தோஷம் எனப்படும் தோஷங்கள் இருந்தால் திருமணம் தள்ளிப்போகும்.

இன்றைக்குப் பலருக்கும் இருக்கும் பிரச்னை, ஒரு ஜோதிடர் பொருந்துகிறது என்று சொல்லும் ஜாதகத்தை மற்றொரு ஜோதிடர் பொருந்தவில்லை என்பதுதான். இதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள். ஒன்று சிலர் நட்சத்திரப் பொருத்தம் தொடர்புடைய 10 பொருத்தங்களை மட்டுமே பார்த்து சொல்வது.
ஒரு சிலர் நட்சத்திரப் பொருத்தம் தாண்டி மணமக்களின் தசாகாலங்களையும் ஆராய்ந்து சொல்வது. ஒன்று பொருந்தி இருக்கும் பட்சத்தில் மற்றொன்று சரியில்லை என்பதால் பலர் தவிர்ப்பது உண்டு.
ஒரு சிலர் வரனைத் தவிர்க்கவும் இந்தக் காரணத்தைச் சொல்லித் தப்பித்துக் கொள்வது உண்டு. இப்படிப்பட்ட சிக்கல்களால் தவிப்பவர்களுக்குச் சிறந்த தீர்வாக அமைவது சுயம்வர பார்வதி ஹோமம். இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கலிபித்தால் உரிய வரன் தேடிவரும் என்பது நம்பிக்கை.
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதிதேவி, சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தைக் குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து, தேவியின் மன உறுதியைச் சோதித்த பிறகு அவரை மணந்தார்.
தனக்குக் கிடைத்ததைப் போன்ற இனிய துணை ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வகை செய்யும் வழிபாடுதான் சுயம்வர பார்வதி ஹோமம். இந்த ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கியதாகத் தெரிகிறது.
இந்த மந்திரங்கள், ‘உலகத்தில் உள்ள சகலவிதமான அசையும் - அசையாப் பொருள்களின் சரீரத்தையும், மனதையும் என்னிடம் ஆகர்ஷணம் செய்வாயாக!’ என்றே வேண்டுகின்றன.

யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ, அவரை முன்னிட்டு ‘கெட்ட பலன்களைத் தரும் கிரக அமைப்பினாலோ, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ காரியங்களாலோ, முன்னோர்கள் எப்போதோ செய்த தவறுகளாலோ, இவருக்கு திருமணம் தடைபடுகிறது.
இந்த நட்சத்திரத்தில், இன்ன ராசியில் பிறந்த இவருக்கு திருமணத் தடை நீங்கி, சுயம்வர பார்வதி - பரமேஸ்வரரின் அருள் பெற்று விரைவாகவும் உசிதமான காலத்திலும் திருமணம் நடைபெற இந்த ஹோமம் செய்கிறேன்’ என்பதே ஆகும்.
இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால் விரைவில் கல்யாண வரம் தேடிவரும். இதை வீட்டில் செய்வது மிகவும் கடினம். உரிய வேதியர்களைக் கொண்டே செய்ய வேண்டும். பெரும் பொருட்செலவு பிடிக்கும்.
அப்படிப்பட்ட ஹோமத்தை வாசகர்களுக்காக மதுரை மாநகரில் சக்தி விகடன் நிகழ்த்த இருக்கிறது. இந்த நிகழ்வை மதுரையைச் சேர்ந்த அனுஷத்தின் அனுகிரகம் டிரஸ்ட் இணைந்து வழங்குகிறார்கள். மேலும் தமிழ் மேட்ரிமோனியும் இணைந்து வழங்குகிறார்கள். அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பைச் சேர்ந்த நெல்லை பாலு இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம்தான் சொந்த ஊராகக் கொண்ட நெல்லை பாலு .எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்தவர். படித்தேன். படிக்கும் காலத்தில் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றேன்.
நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக காஞ்சிபுரத்தில் 15 ஆண்டுகள் பனியாற்றியபோது இவருக்கு மகாபெரியவரின் அருளாசி கிடைத்தது. அதன்பின் 25-க்கும் மேற்பட்ட ஆன்மிக நூல்கள் எழுதிநார். இவர், பரமாசார்யர் பற்றி ஆங்கில நூலை அப்போதைய குடியரசுத்தலைவர் வெங்கட்ராமன் வெளியிட்டார். ஒரு நாளைக்கு 200 முதல் 300 பேருக்கு மதிய உணவு வழங்கி வருகிறார். இது மட்டுமின்றி மாதம்தோறும் அனுச நட்சத்திர தினத்தில் காஞ்சி பெரியவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆன்மிகப் பேச்சாளர்களை அழைத்து வந்து உரைகளை நிகழ்த்தச் சொல்லி மகாபெரியவரின் புகழ்பரப்பும் பணியில் ஈடுபட்டுவருகிறார். தற்போது மகாபெரியவருக்கு மாபெரும் ஆலயம் ஒன்றை மதுரை பொய்கைக்கரைப்பட்டியில் கட்டத் திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்துவருகிறது.

இப்படி அறப்பணிகளையும் அருட்பணிகளையும் செய்துவரும் அனுஷத்தின் அனுகிரகம் டிரஸ்ட் சக்தி விகடனுடன் இணைந்து நடத்தும் சுயம்வர பார்வதி ஹோம வைபவம் வரும் செப்.17 - ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்தால் திருமண வரம் கிட்டும் என்பது நிச்சயம்.
இந்த வைபவம் மதுரை எஸ்.எஸ்.காலனி, 2 ஏ பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு என்னும் முகவரியில் இருக்கும் பிராமண கல்யாண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. காலை 10 மணிக்கு இந்த வைபவம் தொடங்கும். நிகழ்வில் கலந்துகொள்ள விருபுபவர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே மண்டபத்துக்கு வந்துவிட வேண்டும். நேரில் வந்து கல்ந்துகொள்பவர்களுக்கு சிறப்பு ரக்ஷை, குங்குமப் பிரசாதம் வழங்கப்படும்.
இந்த வைபவத்தில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதும் இல்லை. என்றாலும் முன்பதிவு அவசியம். (முன்பதிவுக்குப் பின் இதுகுறித்து வேறு எந்தத் தகவலும் அனுப்பிவைக்கப்படாது.)
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)