'பொக்கிஷமாகப் போற்றுவேன்!' - திருமண வாழ்வில் 20 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடிய சூர்யா - ஜோதிகா

Sep 16, 2026 - 07:30
0
'பொக்கிஷமாகப் போற்றுவேன்!' - திருமண வாழ்வில் 20 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடிய சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களுடைய 20-வது திருமண நாளைக் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி கொண்டாடினர்.

திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அதனை இந்த தம்பதியினர் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த கொண்டாட்ட நிகழ்வின் காணொளியைச் சூர்யாவும் ஜோதிகாவும் அவர்களுடைய சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்திருக்கிறார்கள்.

Suriya
Suriya

அந்தக் காணொளியைப் பதிவிட்டு ஜோதிகா, "தி சீக்குவல்! எங்களது 20 ஆண்டுகால அன்பையும் சண்டைகளையும் கொண்டாடும் வகையில், மீண்டும் ஒருமுறை எடுத்துக்கொண்ட திருமண உறுதிமொழி.

இது திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல. இது குறைபாடுகளையும், விட்டுக்கொடுத்தல்களையும், புரிந்துணர்வையும், தியாகங்களையும், சுயநலமற்ற அன்பையும் கொண்டாடும் விழா.

ஒருவருக்கொருவர் நாம் எப்படி மாறி இருக்கிறோம் என்பதற்கான கொண்டாட்டம். உண்மைக்கு மிகத் தொலைவில் இருப்பது போல் தோன்றிய ஒரு கனவு, இன்று என் வாழ்நாள் முழுமைக்கும் நான் கனவு காணும் ஒரு நிஜமாக மாறியிருக்கிறது!

இப்போது இந்த விஷயங்களை நான் உறுதிமொழியாக எடுத்துக்கொள்கிறேன். நான் எப்போதும் மகிழ்ச்சியான நபராக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். ஏனெனில், வாழ்க்கையின் நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்க நான் விரும்புகிறேன்.

வாழ்க்கையைக் கொண்டாட்டத்துடன் நகர்த்த உறுதியளிக்கிறேன். ஏனெனில், தான் நேசிக்கும் பெண்ணைத் தன்னை விட அதிகமாக மதிக்கும் ஒரு ஆண் துணை கிடைக்கும்போது, இந்த வாழ்க்கையே ஒரு வரமாகிறது.

நான் ஒருபோதும் குறை சொல்ல மாட்டேன் என உறுதியளிக்கிறேன். நான் ஏன் குறை சொல்ல வேண்டும்? மிகப்பரந்த வானத்திற்குக்கூட பூமியைத் தொடும் பாக்கியம் கிடைக்காதபோது, சுற்றிலும் பாருங்கள், இந்த உலகில் உள்ள அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அரைகுறையானதுதான். அந்த இடைவெளிகளை நாம் எப்படி நிரப்புகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.

Jyothika & Her Son Dev
Jyothika & Her Son Dev

நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன். ஏனெனில், ஒவ்வொரு காலையிலும் என்னைப் பாதுகாக்கும் ஒரு ஆணின் அரவணைப்பில் நான் கண்விழிக்கிறேன்.

என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும், நான் வாழ்வதற்குக் காரணத்தையும் கொடுத்த என் அழகிய குழந்தைகளுக்காக நன்றியோடு இருக்கிறேன்.

நான் ஆரோக்கியமாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். ஏனெனில், நாம் சேர்க்கும் ஒரே உண்மையான சொத்து அதுமட்டும்தான். எவ்வளவு ஆடம்பரமான செங்கல் வீடாக இருந்தாலும், அதில் கசிவுகளும் கரையான் தொல்லைகளும் புனரமைப்புகளும் இருக்கவே செய்யும்.

நான் ஒரு சிறந்த தாயாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். நான் சமைப்பதாலோ, வீட்டைச் சுத்தம் செய்வதாலோ, உதவி செய்வதாலோ அல்ல, மாறாக என் சிரிப்பைக் கண்டு, என் குழந்தைகள் தங்கள் அப்பா-அம்மா வாழ்ந்த இந்த வாழ்க்கையைத் தாங்களும் வாழ வேண்டும் என்று விரும்புவதற்காக, அந்தப் புன்னகையோடு இருப்பேன்.

Suriya
Suriya

என் சூர்யா, உங்களுக்காக எப்போதும் அந்த முழுமையற்ற மனைவியாகவே இருக்க உறுதியளிக்கிறேன்.

சண்டையிட்டு, பின் சமாதானமாகி, ஒவ்வொரு முறையும் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாவதற்காக மட்டுமே. எல்லாவற்றிற்கும் மேலாக நமது நட்பைப் பொக்கிஷமாகப் போற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.

ஏனெனில், உங்களுக்கு நிகரான ஒருவராகவும், உங்களது நம்பிக்கைக்குரியவராகவும், உங்களது அரட்டைத் தோழனாகவும், உங்களது சிறந்த நண்பனாகவும் இருக்கும் ஒருவர்... உங்களது கணவராகவும், உங்களது குழந்தைகளின் தந்தையாகவும் ஒரே நபருக்குள் அமைவது மிகவும் அரிதான ஒன்று. எங்களது அடுத்த இருபது ஆண்டுகளுக்கான தொடக்கம் இது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User