தாம்பரம்: ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு; மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Sep 15, 2026 - 20:30
0
தாம்பரம்: ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு;  மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ 45,00,000 கூட்டு சதி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டிருந்தப் பதிவில், " தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.

இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ?" என்று பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற தலைமை செயலாளர் அதிரடி உத்தரவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User