விஸ்வநாத் & சன்ஸ்: `சூர்யாவின் நடிப்பு Wow; மீண்டும் பார்க்க என்னை தூண்டுகிறது'- கார்த்தி பாராட்டு

Aug 14, 2026 - 12:30
0
விஸ்வநாத் & சன்ஸ்: `சூர்யாவின் நடிப்பு Wow; மீண்டும் பார்க்க என்னை தூண்டுகிறது'- கார்த்தி பாராட்டு

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'.

இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

'விஸ்வநாத் & சன்ஸ்'
'விஸ்வநாத் & சன்ஸ்'

'விஸ்வநாத் & சன்ஸ்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்த கார்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படக்குழுவினரைப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

அவரது பதிவில், "என்ன ஒரு அருமையான எழுத்து வெங்கி அட்லுரி. அழகான கதாபாத்திரங்கள், வியக்க வைக்கும் நடிப்பு, அன்பால் இதயத்தை நிறைத்து, முழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு படமாக இருக்கிறது. படம் முழுவதும் புன்னகைக்க வைக்கிறது.

மீண்டும் பார்க்க என்னை தூண்டுகிறது. சூர்யாவின் நடிப்பு Wow. மமிதா, ராதிகா உங்களின் நடிப்பு மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User