விழுப்புரம்: ஐயப்ப பக்தர்கள் வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து - பக்தர் உட்பட இருவர் உயிரிழந்த சோகம்

Nov 23, 2026 - 11:00
0
விழுப்புரம்: ஐயப்ப பக்தர்கள் வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து - பக்தர் உட்பட இருவர் உயிரிழந்த சோகம்

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தேனியில் இருந்து புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து இன்று காலை சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியைக் கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த ஒரு லாரியின் மீது உரசியது.

அதேவேகத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஐயப்ப பக்தர்கள் வேன் மீது மோதியது. அதில் அந்த வேன் தலைகுப்புறக் கவிழ்ந்து விழுந்து நொறுங்கியது. அதையடுத்து அந்த ஆம்னி பேருந்து ஒரு உணவகத்தில் மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.

விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து

விபத்து குறித்து நெடுஞ்சாலை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்த அவர்கள், விபத்தில் சிக்கிய பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் வேனின் ஓட்டுநரும், ஐயப்ப பக்தர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல படுகாயங்களுடன் இருந்த 13 பேர் மீட்கப்பட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய மயிலம் போலீஸார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User