திருப்பரங்குன்றம்: Red Zone-ஆக அறிவிக்கப்பட்ட மலைப் பகுதி; குவிக்கப்பட்ட போலீஸ்... விவரம் என்ன?!

Nov 23, 2026 - 19:00
0
திருப்பரங்குன்றம்: Red Zone-ஆக அறிவிக்கப்பட்ட மலைப் பகுதி; குவிக்கப்பட்ட போலீஸ்... விவரம் என்ன?!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்றலாம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரும் வகையிலான சீராய்வு மனுவினை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருக்கிறது. நாளை கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவிருக்கும் நிலையில், திருப்பரங்குன்றத்தில் சற்றே பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழ்நாடு அரசு, `திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது நில அளவைக்கல்தான்!' என ஆதாரத்தை வெளியிட்டு, விளக்கியிருக்கிறது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் மதுரை மாநகரக் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இதன் ஒரு பகுதியாக, ட்ரோன் விதிகள் 2016-ன் விதி 24-ன் கீழ், 23.11.2026 முதல் 24.11.2026 வரை திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட மலை முழுவதும், கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் (UAV) பறக்கத் தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக (RED ZONE) அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த நாள்களில் அனுமதி இன்றி ட்ரோன்கள் இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ட்ரோன்களை இயக்க வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும்.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User