குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்!

Nov 23, 2026 - 21:00
0
குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்குப் பாலியல் 
தொல்லை; போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டுக்குப் பின்புறம் அமைக்கப்பட்ட மறைவிடத்தில் சிறுமி குளித்திருக்கிறார். அப்போது வீட்டில் பெற்றோர் உள்ளிட்ட யாரும் இல்லை எனச் சொல்லப்படுகிறது.

போக்சோ
போக்சோ

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பொய்யுண்டார் கோட்டை மொட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளவரசன் (28) என்பவர், சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி அலறியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். பாதிக்கப்பட்ட மாணவி ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் வேம்பு, வழக்கு பதிவுசெய்து இளவரசனிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததை இளவரசன் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள். இதையடுத்து போலீஸார் இளவரசனை போக்சோ வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இளவரசன், சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்திருக்கிறார். வீட்டுக்குப் பின்புறம் சிறுமி தனியாக குளித்ததைப் பார்த்தவர் பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User