"யாராவது என் குடும்பத்தைப் பற்றிப் பேசினால் எனக்கு பிடிக்காது, அப்போது நான்.!"- ராஷ்மிகா மந்தனா

Nov 23, 2026 - 13:30
0
"யாராவது என் குடும்பத்தைப் பற்றிப் பேசினால் எனக்கு பிடிக்காது, அப்போது நான்.!"- ராஷ்மிகா மந்தனா

பொது வாழ்வில் இல்லாத தனது குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'மைசா'. இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'மைசா'
'மைசா'

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டபோது ராஷ்மிகா மந்தனா தன் குடும்பத்தினர் மீது எழும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

பேட்டி ஒன்றில் பேசிய அவர், " யாராவது என் குடும்பத்தைப் பற்றிப் பேசினால், எனக்கு அது பிடிக்காதது. நான் முழுமையான வாரியார் மோடுக்கு மாறிவிடுவேன். நான் முழுக்க முழுக்க 'மைசா' போல மாறிவிடுவேன். என் குடும்பத்தினர் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்காததால் அவர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பேசுவது எனக்கு பிடிக்காது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

அவர்கள் பொது வாழ்வில் இருப்பவர்கள் கிடையாது. எனவே, பொது வாழ்வில் இல்லாத ஒருவரின் பெயரை இழுக்கும்போதோ அல்லது அவர்களின் ஆளுமைக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிக்கும்போதோ சரியான விஷயம் கிடையாது. தன்னைப் பற்றிய விமர்சனங்களை 'தொழில்சார் சவாலாக' கடந்து விடுகிறேன். ஆனால் என் குடும்பத்தினரைச் சம்பந்தப்படுத்திப் பேசும்போது எல்லை மீறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User