"பாலிவுட்டை விடத் தென்னிந்தியத் திரையுலகம் பல மடங்கு சிறந்தது" - நடிகை சமீரா ரெட்டி கூறியதென்ன?
நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரையுலகமே சிறந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
'Hindustan Times' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சமீரா ரெட்டி, "தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றியது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. நான் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றினேன், எனது தனிப்பட்ட அனுபவங்கள் அற்புதமாக இருந்தன.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயணம் இருக்கும், ஆனால் என்னைப் பொறுத்தவரை, பாலிவுட்டை விடத் தென்னிந்தியத் திரையுலகம் பல மடங்கு சிறந்தது.

பாலிவுட் ரசிகர்கள் 'ஓ ஆமாம், சமீரா ரெட்டி என்று ஒருவர் இருந்தார்' என்று சொல்லக்கூடும். ஆனால் தென்னிந்திய ரசிகர்கள் இன்றும் என்னை அன்புடன் வரவேற்று, என் மீது அன்பு வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவர்கள் இன்றும் என்னை 'வாரணம் ஆயிரம்' மேக்னாவாகவே அழைக்கிறார்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகும் கிடைக்கும் அந்த வகையான அன்பு இதுவரை இல்லாத ஒன்று.
எனது முதல் படமான 'மைனே தில் துஜ்கோ தியா'வில், என்னை இரண்டு முதல் மூன்று ஷேடுகள் வரை வெள்ளையாகக் காட்டினார்கள். நான் கிட்டத்தட்ட சாம்பல் நிறத்தில் தெரிந்தேன். என் முகத்தின் நிறத்துடன் உடலின் நிறத்தைப் பொருத்துவதற்காக உடல் முழுவதும் மேக்கப் போடுவேன்.

எத்தனை பெண்களுக்குத் தங்கள் சொந்தக் குடும்பத்திற்குள்ளேயே இந்தப் பிரச்சனை இருக்கிறது தெரியுமா? அவர்களின் சொந்தப் பெற்றோரும் மாமியார் வீட்டாருமே'நீ கருப்பாக இருக்கிறாய் அல்லது குண்டாக இருக்கிறாய்' என்று சொல்கிறார்கள். என்ன கொடுமை இது. அழகுக்கான இலக்கணத்தை யார் கொடுத்தது?" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)