உ.பி: பெண்ணாக மாற அறுவை சிகிசைக்கு விரும்பிய மகன் - எதிர்த்த தாயை அடித்து கொன்ற மகன்! | அதிர்ச்சி
பிறப்பால் சிலருக்கு ஹான்மோன் சிக்கல்கள் இருப்பது வழக்கம். அது போன்ற ஹார்மோன் சிக்கல் இருப்பவர்கள் ஆணாக இருப்பவர்களுக்கு பெண்களுக்கான குணமும், பெண்ணாக இருப்பவர்களுக்கு ஆண்களுக்கான குணமும், நடவடிக்கைகளும் இருக்கும். இது போன்ற நிலையில் இருப்பவர்கள் தாங்கள் விரும்பிய பாலினத்தை தக்கவைத்துக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொள்வது வழக்கத்தில் உள்ளது. ஆனால் அது போன்று செய்யாமல் திருநங்கையாக, திருநம்பியாக வாழ்பவர்களும் அதிகம்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசிக்கும் 17 வயது மைனர் சிறுவன் பிறப்பால் ஆணாக பிறந்தான். ஆனால் அவனது உடம்பில் ஹார்மோன் பிரச்னை இருந்தது. எனவே அந்த சிறுவன் தான் பெண்ணாக வாழ விரும்பினான். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்பினான். ஆனால் இதற்கு அச்சிறுவனின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இது தொடர்பாக மைனர் சிறுவனுக்கு ஏற்கனவே கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் மருத்துவம் மற்றும் கவுன்சிலிங் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண மைனர் சிறுவனின் தாயார் விரும்பினார். ஆனால் அதனை மைனர் சிறுவன் ஏற்கவில்லை. தான் பெண்ணாக மாறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். மைனர் சிறுவன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தான். அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக மைனர் தனது தாயாரை மீண்டும் சந்திக்க சென்றார். அங்கு இரண்டு பேரும் இது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறுவன், தான் கொண்டு வந்த குறடு மூலம் தனது தாயின் தலையில் பலமுறை அடித்துள்ளான். அதோடு மிளகாய் பொடியை தூவி இருக்கிறார். இத்தாக்குதலில் சிறுவனின் தாயார் இறந்த பிறகு அவனே இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தான். உடனே போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மைனரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி விவேக் குமார் கூறுகையில், ''சிறுவனிடம் விசாரித்தபோது கொலைக்கு பிறகு போலீஸ் எடுக்கும் நடவடிக்கை, கொலைக்கு கிடைக்கும் தண்டனை, கொலையைத் தொடர்ந்து சட்டப்பூர்வ நடைமுறைகள் போன்ற தகவல்களை சிறுவன் ChatGPT மூலம் தெரிந்து கொண்டுள்ளான். குடும்பத்தினர் ஏற்கனவே மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து, சிறுவனுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்து வந்தனர்.
மைனர் சிறுவன் தனது அடையாளத்தை ஒரு பெண்ணாக ஏற்றுக்கொண்டதாகவும், உலகம் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் மைனர் சிறுவன் விரும்பினான்'' என்றும் கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)