'துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்; திமுக கூட்டணியில் தொடர்வது..!' - துரை வைகோ மதிமுக

Jun 01, 2026 - 17:01
0
'துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்; திமுக கூட்டணியில் தொடர்வது..!' - துரை வைகோ மதிமுக

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்திருக்கிறது.

இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.

ஒருவர் ஒரு தொகுதியின் எம்எல்ஏ- வாக மட்டுமே இருக்க முடியும் என்பதால், விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதல்வர் விஜய் நேரில் சென்றிருக்கிறார். முதல்வர் விஜய்யை மதிமுக எம்.பி துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரை வைகோ, "நாங்கள் இனி தனி இயக்கம். நாங்கள் துரதிஷ்டவசமாக திமுக கூட்டணியில் உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம். உதய சூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் தவெக-விற்கு ஆதரவு தரமுடியவில்லை.

மதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருக்கிறோம். திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து 27 ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் முடிவு எடுப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User