Serial update: `இதனாலதான் மகன் கல்யாணத்துக்கு பலரையும் கூப்பிடலை!' - கம்பம் மீனா

Jun 01, 2026 - 17:01
0
Serial update: `இதனாலதான் மகன் கல்யாணத்துக்கு பலரையும் கூப்பிடலை!' - கம்பம் மீனா

இதனாலதான் மகன் கல்யாணத்துக்கு பலரையும் கூப்பிடலை!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாக்கியலட்சுமி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை கம்பம் மீனாவின் மகன் விஜய சரவணன் திருமணம் இரு தினங்களூக்கு முன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைத்து நடைபெற்றது,

மணப்பெண் அனிஷா ஹெச்.ஆர்-ஆக பணி புரிகிறாராம்.

திருமணத்துக்கு சின்னத்திரை வட்டாரத்தில் நெருங்கிய நட்பு வட்டத்தில் கூட யாருக்கும் மீனா தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் கிடைக்க, மீனாவிடமே பேசினோம்.

''எனக்கு ரெண்டு மகன்கள். விஜய சரவணன் மூத்த மகன். ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து அந்த வாழ்க்கை சரியாக அமையாததால் முறைப்படி அதுல இருந்து வெளியில வந்துட்டான். அதனால இன்னொரு திருமணம் வேண்டாம்னு சொல்லிட்டிருந்தான்.

கம்பம் மீனா

ஒரு அம்மாவா என்னால அப்படி விட முடியுமா? அதனால அவன்கிட்ட தொடர்ந்து பேசி கன்வின்ஸ் செய்து கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சேன். மேட்ரிமோனியல் மூலமா பொண்ணு அமைஞ்சது. கல்யாணம் சிம்பிளா இருக்கட்டுமேனுதான் கோவில்ல வச்சு பண்ணினோம். ஆனா பொண்ணு வீட்டுக்காரங்க அவங்க விருப்பப்படி சொந்த பந்தங்களைக் கூப்பிட்டிருந்தாங்க. அவங்க விருப்பத்துக்கு குறுக்க நிற்க விரும்பலை. நல்லபடியே திருமணம் முடிஞ்சிடுச்சு'' என்றார் அவர்.

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது நினைவிருக்கலாம். தலைவராக நடிகர் பரத்தும் செயலாளராக நவீந்தரும் தேர்வானார்கள். ஏற்கனவே இருந்த நிர்வாகத்தினர் படு தோல்வியடைய பரத் தலமையிலான அணி அமோக வெற்றி பெற்றது.

வெற்றி பெற்று ஓராண்டு கூட நிறைவடையாத சூழலில் தற்போது சங்க நிர்வாகிகள் சிலரிடையே கருத்து வேறுபாடு உண்டாகி அதன் எதிரொலியாக செயற்குழு உறுப்பினர் துரை மணி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பரத்

என்ன நடந்ததென விசாரித்தோம்.

'தேர்தல்ல வென்றதும் அத்தனை பேரும் ஒற்றுமையா இருந்து சங்கத்தை வழிநடத்துவோம்னு பேட்டியெல்லாம் தந்தாங்க. ஆனா கொஞ்ச நாளிலேயே நிர்வாகிகளிடையே குரூப்பிசம் உண்டாகிட்டதாத் தெரியுது. செயற்குழுவுல இருக்கிற ஒரு சிலருடைய பேச்சை மட்டுமே கேட்டு பரத் செயல்படுகிறார் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

வேறு சிலரோ உறுப்பினராகச் சேர்த்து விடுவதற்கு சிலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாகப் புகார் எழுப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே நிர்வாகிகள் இடையே பிரச்னை உண்டானது என்கிறார்கள். எது எப்படியோ துரைமணி சங்கப் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக கடிதம் அனுப்பி விட்டதாகச் சொல்கிறார்கள்.

நிர்வாகிகள் முன்வந்து வாய் திறந்தால்தான் உண்மையான காரணம் தெரிய வரும்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User