இந்தியாவில் இருந்து ஒரே நாளில் வெளியேறிய ரூ.21 ஆயிரம் கோடி - சென்ற ரூட் எது? என்ன நடக்கிறது?

Jun 01, 2026 - 17:01
0
இந்தியாவில் இருந்து ஒரே நாளில் வெளியேறிய ரூ.21 ஆயிரம் கோடி - சென்ற ரூட் எது? என்ன நடக்கிறது?

இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) தங்களது முதலீடுகளை வெளியேற்றுவது தொடர் கதை தான். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர 'ஷாக்' ஒன்றைக் கொடுத்தனர் அவர்கள்.

அதாவது, அன்று (மே 29) மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருந்து வெளியேற்றிய பணம் - ரூ.21,105.86 கோடி. ஆனால், இதை ஓரளவு பேலன்ஸ் செய்யும் விதமாக, அன்று இந்திய முதலீட்டாளர்கள் ரூ.16,764.14-க்கு முதலீடு செய்திருந்தனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து ஏன் தொடர்ந்து வெளியேறுகிறார்கள் என்கிற கேள்வியை பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

"வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து தங்களது முதலீடுகளை 2021-ம் ஆண்டில் இருந்தே வெளியேற்றிக் கொண்டு தான் வருகின்றனர்.

ஆனால், இப்போதைய வெளியேற்றத்திற்கு பதிலாக பல காரணங்கள் வெளிவருகின்றன.

> தொடரும் ஈரான் போர்

> சறுக்கும் இந்திய ரூபாய் மதிப்பு

> பணவீக்க அச்சுறுத்தல்

> காலாண்டு முடிவுகள் சாதகமாக இல்லாதது

> வேல்யூயேஷன் பிரச்னை

> இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த பயம்

போன்றவற்றால் 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுகிறார்கள்.

இவர்கள் வெளியேற்றும் பணம் எங்கு செல்கிறது?

தற்போது ஏ.ஐ தான் எதிர்காலம் என்று நன்கு தெரிகிறது. ஆனால், அதன் முன்னெடுப்புகளை இன்னும் இந்தியா பெரியளவில் எடுக்கவில்லை.

ஆனால், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகள் 'சிப் தொழிற்சாலையில்' கவனம் செலுத்தி வருகின்றன. ஆக, அந்தச் சந்தையை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நகர்கின்றனர்.

தென் கொரிய சந்தையான Kospi தொடர்ந்து புதிய புதிய உச்சங்களைத் தொடுவதே இதற்கான சாட்சி" என்று கூறினார்.

AI
AI

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியேற்றுவதால் இந்தியாவிற்கு என்ன பிரச்னை?

> இது இந்திய பங்குச்சந்தையை வீழ்ச்சிக்குத் தள்ளும்.

> வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை விற்று, பணத்தை வெளியேற்றும் போது, அது டாலர்களாகத் தான் இந்தியாவை விட்டு வெளியே செல்லும். இது இந்திய ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்யும்.

> அவர்கள் எந்தெந்தத் துறையில் இருந்து பணத்தை பெருமளவில் வெளியேற்றுகிறார்களோ, அந்தத் துறை பெரும் அழுத்தத்தைச் செல்லும்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User