திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்

Oct 05, 2026 - 16:00
0
திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ், எம்.பி கிறிஸ்டோபர் திலக், த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், ``தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் நல்லாட்சியில் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.

அமைச்சர் ரமேஷ்
அமைச்சர் ரமேஷ்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தவெக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது எனப் பேசியவர்கள் மத்தியில், இன்று மக்களின் அமோக ஆதரவோடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தாராபுரம் தொகுதியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகிறோம். களத்தில் பொதுமக்கள் அனைவரும் தமிழக வெற்றித் கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்க மிகுந்த ஆர்வத்தோடு தயாராக இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் தங்களின் தோல்வி பயத்தால் திட்டமிட்டுப் பொய் பிரசாரங்களைச் செய்து வருகின்றன. மக்களை நேரடியாகச் சந்திக்கக் கூடாது என்று முந்தைய ஆட்சியில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது. இப்போது எங்கள் ஆட்சியில், மக்களை நேரில் சந்திக்கிறார். உங்களுக்கு என்னதான் பிரச்னை?

தலைவர் வெளியே வந்தாலும் பிரச்னை என்கிறீர்கள். தேர்தலுக்கு பண கொடுக்கவில்லை. இடது சாரிகள் குற்றம்சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஜனநாயக நாட்டில் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகளின் வீண் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளி, மக்கள் ஆதரவோடு தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User