"இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி ராகுல் காந்தி

Jul 25, 2026 - 19:02
0
"இந்த அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'' -  தர்மேந்திர பிரதான் ராஜினாமா பற்றி ராகுல் காந்தி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இது நமக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலகியது குறித்து தற்போது ராகுல் காந்தி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "தர்மேந்திர பிரதானின் ராஜினாமா நமது கல்வி முறையை மீண்டும் சீரமைப்பதற்கான மிகப்பெரிய படியாகும். நாடு முழுவதும் உள்ள மாணவத் தோழர்களுக்கு வாழ்த்துகள், உங்கள் அனைவரையும் எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

தெருவில் இறங்கி ஜனநாயகம் மற்றும் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உறுதியுடன் களத்தில் நின்ற ஒவ்வொரு இளைஞருக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்னும் 2 கோரிக்கைகள் மீதம் உள்ளன. மாணவர்கள் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மதித்துப் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User