தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை; தவெக நிர்வாகிகள் கைது

Jun 02, 2026 - 11:02
0
தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை; தவெக நிர்வாகிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.

அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.  

அனைத்து மகளிர் காவல் நிலையம்
அனைத்து மகளிர் காவல் நிலையம்

ராமநாதபுரம் அருகே  ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போதுதான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.  

அனைத்து மகளிர் காவல் நிலையம்
அனைத்து மகளிர் காவல் நிலையம்

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, “பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. தேர்தல் காலத்தைப் போல தி.மு.க மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள்தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதல்வர் விஜய் அவர்கள் செயல்படப் போவது எப்போது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User