புதிய ஆட்சி அமைந்த 'அடுத்த நாளே'... நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஒலி 'அதிரடி' கைது

Mar 28, 2026 - 11:33
 0
புதிய ஆட்சி அமைந்த 'அடுத்த நாளே'... நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஒலி 'அதிரடி' கைது

2025-ம்‌ ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நேபாளத்தில் 'Gen Z'யினர் போராட்டத்தைத் தொடங்கினர்.

ஊழல், வேலைவாய்ப்பு இன்மையால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த இளைஞர்கள், அப்போது சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட வெகுண்டெழுந்தனர்.

போராட்டம் தொடங்கிய ஐந்து நாள்களில் (செப்டம்பர் 9) அப்போதைய நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்று சமூக வலைதளங்களின் தடையும் ரத்து செய்யப்பட்டது.

நேபாளம் போராட்டம்
நேபாளம் போராட்டம்

தேர்தல்

இதையடுத்து நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்த நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி பொறுப்பேற்றார். இவர் தான் நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி வேண்டும் என்று கடந்த மார்ச் 5-ம் தேதி அங்கே தேர்தல் நடத்தப்பட்டது.

அதில் காத்மாண்டு மேயரும் முன்னாள் ராப்பருமான பாலேந்திரா ஷாவின் ராஸ்ட்ரிய சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது.

நேற்று பாலேந்திரா ஷா பிரதமராக பதவியேற்றார்.

கைது

இவர் பிரதமராக பதவியேற்ற அடுத்த நாளே (இன்று) கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரது முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இரண்டு பேரும் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தை வன்முறையால் ஒடுக்க முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0