ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த' காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? - சுப்ரமணியன் சுவாமி

Mar 10, 2026 - 11:01
 0
ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த' காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? - சுப்ரமணியன் சுவாமி

இதுவரை எதிர்க்கட்சிகள் தான், `அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன சொல்கிறாரோ, அதைத் தான் இந்திய பிரதமர் மோடி செய்து வருகிறார்' என்று குற்றம்சாட்டி வந்தனர்.

ஆனால், இப்போது உள்கட்சியில் இருந்தே இந்தக் குரல் வந்துள்ளது. அதுவும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் குரல்.

பாஜகவிற்குள் இருந்துகொண்டே அந்தக் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பது சுப்ரமணியன் சுவாமிக்குப் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்
அப்படி ட்ரம்பை வைத்து மோடி குறித்து சுப்ரமணியன் சுவாமி என்ன கூறியுள்ளார்?

"இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏன் இப்படிப் பயப்படுகிறார்?

மோடி எதனால், யாரால் இப்படி இருக்கிறார் என்பதை என்னிடம் எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள் கூறினார்கள். ஆனால், அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது.

அது வெளியே தெரிந்தால் மோடி தனது பிரதமர் பதவியைக் கூட ராஜினாமா செய்ய நேரிடலாம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0