"ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி" - பாஜக தலைவர் நிதின் நபின் விமர்சனம்

Apr 24, 2026 - 12:01
 0
"ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி" - பாஜக தலைவர் நிதின் நபின் விமர்சனம்

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் விமர்சித்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிதின் நபினிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அரசின் ஒரு அங்கம் ஆவார்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் ராகுல் காந்தி

ஆனால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் மற்றும் மொழிநடையை உற்று நோக்குங்கள்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர், அதுவும் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் இத்தகைய முறையிலா பேசுவார் ? எப்போதும் ஒரு அராஜக மனநிலையுடன் செயல்படுகிறார்.

நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கிறார். ராகுல் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி.

அவரது அரசியல் வளர்ச்சி ஏதோ ஒரு வகையில் முறையாக அமையவில்லை என்றே நான் நம்புகிறேன்.

 நிதின் நபின்
நிதின் நபின்

கார்கே தனது கட்சி பாரம்பர்யத்தின் வழிகாட்டியாக உருவெடுத்து வருகிறார்.

இதற்காக காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டித்து வருகின்றனர். என்றாலும் அக்கட்சி இன்னும் பாடம் கற்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0