தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி! – காரணம் என்ன?

Apr 24, 2026 - 13:33
 0
தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி! – காரணம் என்ன?

முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையின் போது கோவை மற்றும் கரூர் என மாறி மாறி சென்று தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இருப்பினும் அவர் கோவையில் கூடுதல் கவனம் செலுத்தினார். இதனிடையே தேர்தல் நாளான நேற்று கரூரில் தனது சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜி வாக்களிப்பார் என தி.மு.க-வினர் தரப்பில் சொல்லப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் அவர் தனது சொந்த ஊரில் தான் வாக்களித்து இருந்ததால், கரூர் சென்று வாக்களித்து விட்டு கோவைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஆனால் தேர்தல் வாக்குப்பதிவின் போது கோவை தெற்கு தொகுதி முழுக்க வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்த அவர், கரூர் சென்று இறுதிவரை தனது வாக்கை பதிவு செய்யவில்லை. மக்கள் பிரதிநிதியாக உள்ள அவர் தனது ஜனநாயக கடமையை செய்யாததது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தி.மு.க-வினரிடம் கேட்டபோது, “கரூரில் தி.மு.க-வின் வெற்றி கன்பார்ம், அதேபோல வெற்றியை கன்பார்ம் பண்ண செந்தில் பாலாஜிக்கு கோவையில் டூட்டி போட்டுள்ளதாக முதலமைச்சரே கூறியுள்ளார். எனவே அவர் கோவைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவை தேர்தல் வெற்றி முக்கியம் என்பதாலும், எவ்வித பிரச்சனையும் இன்றி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும் கோவையில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். பூத் ஏஜெண்ட்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்து, அவற்றை சரி செய்தார். அதன் காரணமாக அவரால் கரூர் செல்ல முடியவில்லை” என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0