உடைந்த பகையும், உதிர்ந்த அன்பும் - ஈகோ வென்ற சித்திரைத் திருவிழா!

Apr 25, 2026 - 15:01
 0
உடைந்த பகையும், உதிர்ந்த அன்பும் - ஈகோ வென்ற சித்திரைத் திருவிழா!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஒரு மலை அருகில் அழகிய கிராமம் இருந்தது, அக்கிராமத்தில் ஏழு  வகையான தெருக்கள் காணப்பட்டன! அதில் குடிசை முதல் மொட்டமாடி  என இருநூறு வீடுகள் இருந்தது. அக்கிராமத்தைச் சுற்றி பசுமையான வயல்வெளிகள், கிணறுகள், குளம், ஆறு என இயற்கை வளம் மிகுந்து காணப்பட்டது மற்றும் வெளியூர் சென்று வர பேருந்து போக்குவரத்து வசதி இருந்தது. 

அக்கிராமத்தில் உள்ள மக்கள் வெவ்வேறு சமூகம் மற்றும் மதம் சார்ந்தவர்கள், ஆனாலும் ஒன்றுக் கூடி வாழ்ந்து வந்தனர்! எப்படியெனில் அங்குள்ள மக்களின் குழந்தைகள் சிறு வயது பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இணைந்து படித்தனர்!

பின் அங்குள்ள வயல்வெளிகளில் நாற்று நடுதல், களை எடுத்தல், அருப்பு, உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது ஆகிய வேலைகளில் அனைத்து மக்களின் பங்கு காணப்பட்டது. அது மட்டுமில்லாமல்  கிராமத்தின் வெவ்வேறு மதக் கோவிலின் திருவிழாக்களில் அனைவரும் ஒன்றுக் கூடி சிறப்புச் செய்வர். அவ்விடம் மலையும் மலைச் சார்ந்த இடமென்பதால் ஆடு, மாடு, கோழி, மீன்,பன்றி வளர்ப்பு மற்றும் வேட்டை முறை காணப்பட்டது.

வாரச் சந்தைக்களில் காய்கறி, தானியங்கள் விற்பனை மற்றும் பண்ட பரிமாற்றத்தில் அனைத்து மக்களின் ஒத்துழைப்பு இருந்தது. இரவு நேரங்களில் கிராமத்துப் பெரியவர்கள் அங்குள்ள இளைஞர்களின் கபடி, கொ-கொ, கண்ணாமூச்சி விளையாட்டுக்களைப் பார்த்து ரசித்து, அறிவுக்கேற்ற கதைக்களைக் கூறி வந்தனர்.

கிராம மக்கள் இன்ப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் பங்குப் பெற்றனர்! மக்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இயற்கையாய் சென்றது, சில இளைஞர்கள் வேலை கிடைத்து வெளியூர் பட்டணத்திற்கு சென்றனர், இன்னும் சில இளைஞர்கள் அக்கிராமத்தில் சிறு தொழில் செய்தனர். இப்படியே அன்றாட வாழ்க்கைக்கான செல்வமும், பணமும் கிடைத்தது. வெளியூர் சென்ற இளைஞர்களிடம் அவ்வப்போது கிராமத்திலுள்ள    அவர்களின் பெற்றோர்களும், நண்பர்களும் போனிலும், தபால் கடிதத்திலும் தொடர்புக் கொண்டு பேசி வந்தனர். 

வழக்கம் போல கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டுக்காண தொடக்கத்தில்  ஊர்த் திருவிழா வந்தது, பெறியோர்கள் ஊரில் உள்ள இளையோரிடம் சிறப்பாகச் செய்யப் பொருப்பை ஒப்படைத்து அருகே காவல் துறையிடம் அனுமதி பெற்றனர்,    இளைஞர்களும் வீடு வீடாகச் சென்றும், வெளியூர் சென்ற நண்பர்களிடமும் சிறப்பாக வசூல் செய்தனர். வசூலித்த பணத்தில் திருவிழாக்கால தோரணம், சீரியல் விளக்குகள்,ரேடியோ செட், பேனர்ஸ், எனக் களைக்கட்டியது அக்கிராமத்து ஊர்த் திருவிழா! விழாவை சிறப்பிக்க இளைஞர்கள் மற்றும் பெரியோர்களின் உறவினர்கள்  வெளியூரிலிருந்து  வந்தனர்!

அவர்களை  உள்ளூர் மக்கள் மற்றும் இளையோர்கள் "இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ நம்ம மனச எடுத்து சொல்லும் வந்து நின்று ரசிக்கிற ஊரு சனம் இந்த தேர இழுத்து செல்லும்" என அன்பு மிக்க பாடலோடு வரவேற்றனர். அனைவரும் புத்தாடை உடுத்தி விழாவை சிறப்பு செய்தனர், அந்நேரத்தில் வெளியூர் வேலைக்குச் சென்று முதல் மாதம் சம்பளத்தில் உணர்வு ரீதியாக சில  இளைஞர்கள் தாங்கள் வாங்கிய  புதிய போன் மற்றும் மோட்டர் பைக்குகள் வெளியில் கொண்டு வந்தனர்.கிராமத்தில் இதைப் பார்த்த சில இளையோர் மற்றும் பெரியோர்கள் சீன் போடுகிறார்கள் என முனுமுனுத்தார்கள்!

கிராமத்தின் உட்புறம் இருபுறம் வீடுகள் அமைக்கப்பட்டு சிறிய சாலையாக இருந்தது, அச்சிறியச் சாலையில்    இளைஞன் ஒருவன் தான் வாங்கி வந்த புதிய போனை உள்ளூர்  நண்பர்களிடம் காண்பித்துக் கொண்டிருந்தான், அதே சிறிய சாலையில் இன்னொரு இளைஞன் தான் வாங்கி மோட்டார் பைக்கில் உள்ளூரில் மூன்று நண்பர்களை பின் அமர வைத்து அதிக வேகத்தில் அங்கும் இங்குமாக சென்றுக் கொண்டிருக்கையில், புதிய போனை  காண்பித்தக் கொண்டிருந்த இளைஞனை உரசி விட்டு சென்றனர்! அப்போது கையிலிருந்த புதிய போன் கீழே விழுந்து நொருங்கியது! அதைப் பார்த்த அவனும் மனதளவில் நொருங்கினான்!

மோட்டார் பைக் வண்டியை ஓட்டிச் சென்ற இளைஞர்கள் நிறுத்தி அவனிடம் மன்னிப்புக் கூட கேட்காமல் அடுத்தத் தெரு சாலையை கடந்தனர்.

இதனால் போன் வைத்திருந்த இளைஞனின் கோபம் அதிகமானது அவர்களின் செயல் மூலம், இத்தனைக்கும் அவர்கள் பள்ளி பருவ நண்பர்கள் வெவ்வேறு சமூகம் சார்ந்தவர்கள்! இன்னொரு ரவுண்ட் மோட்டார் பைக்கில் அதே சிறிய சாலையை கடக்க முயன்றனர்! ஆனால் போன் உடைந்த இளைஞன் மற்றும் சக தோழர்கள் அவ்வண்டியான மோட்டார் பைக்கை இடைமறித்தார்கள்! 

அவர்களிடம் போன் உடைத்துவிட்டு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் போரியேடா! என்றார்கள்!இப்படியே இவர்களுக்குள் வாக்குவாதமானது, திருவிழாவிக்கு வந்தவர்களும்,அங்குள்ள பெரியோர்களும் பார்த்தனர்! பின் இந்த இளைஞர்கள் சிறு வயது முதல் ஒன்றாக படித்தவர்கள் நண்பர்களாக இருந்தவர்கள் பேசி சரிசெய்துக் கொள்வார்கள் என்றிருந்தனர்.

ஆனால் வாக்குவாதம் பெரியதாகி அடிதடி கை சண்டையானது, இருவரின் நண்பர்களும் இரத்தம் வரும்வரை  அடித்துக் கொண்டனர்! பின் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், திருவிழாவில் சமுகப் பிரச்சனையாகி காவல் துறை வரவழைக்கப்பட்டு சரியானது, பின்னாளில் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை கனத்த இதயத்தோடு முறைத்துப் பார்த்துக்கொண்டு பிரிந்தனர். 

இப்படியே மூன்று மாதங்கள்  ஒருவரையொருவர் முகம்  பார்க்காமல் முறைத்துக்கொண்டும், பேசாமலும், நல்லது மற்றும் கெட்டதுகளில் பங்கிட்டு வந்தனர்.பின் நாளடைவில் நான்காமாதம் சித்திரை திருநாளான தமிழ் புத்தாண்டு வர அதற்கு ஒரு சமூக இளைஞர்கள் ஒன்றுக் கூடி கிராமத்தில் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் போட்டி  வைத்து பரிசுகள் கொடுக்க முடிவு செய்தனர்!

அப்பொழுது மற்ற சமூகத்தினரும் கலந்துக் கொள்வார்களே எனக் கேள்வி எழுந்தது, அப்படியாவது புன்னகையுடன் வரவேற்று பேசுவோம் எனக் கலைந்தனர். மறுநாள் காவல் நிலையத்தில் தமிழ் புத்தாண்டு விழாக் கொண்டாட  அனுமதி பெற மனுக் கொடுத்தனர்! காவல் நிலைய அதிகாரிகள் ஏற்கனவே  பிரச்சினை இருக்கு  இன்னும் அதிகமாகும் என அனுமதி மறுத்தனர்.

பின் இளம் இளைஞர்கள் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்கிறோம் எனக் தயவுக் கூர்ந்தனர் காவல் துறையும் கிராமத்தின் சமூக முக்கியத்தை உணர்ந்து அனுமதி வழங்கினர். அங்கிருந்துச் சென்று  கிராமத்து பஞ்சாயத்துத் தலைவரை சந்தித்து தமிழ் புத்தாண்டு கொண்டாட தேவையான பணத்தை பெற்றுக் கொண்டனர், பின்னர் அங்கன்வாடியில் பரிசுப் பொருட்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்து நோட்டிஸ் வாங்கிக் கொண்டனர்.

கிராமத்தின் ஏழுத் தெருக்களில் இரவோடு இரவாக நோட்டிஸ் ஒட்டினர். இதைப் பார்த்த அனைத்து சமூக சிறு பிள்ளைகளும் கலந்துக் கொள்ள ஆர்வமெடுத்து ஓடினர்! அவர்களின் பெற்றோர்களும், பெரியோர்களும் இதனைக் கவனித்து கோபம் கொள்ளாமல் சிறு பிள்ளைகளின் மனதில் நஞ்சு விதைக்க வேண்டாம் என மனதளவில் விடுவித்தனர்.

கிராமத்தின் மையப் பகுதியில் சிறிய ரேடியோ செட் மூலம் தமிழ் புத்தாண்டின் வாழ்த்துடன் விளையாட்டு அறிவிப்புத் தொடங்கியது! முதலில்  உறியடி விளையாட்டு என ரேடியோவின் சவுண்ட் எழுத் தெருக்கும் கேட்டது! இதனைக் கேட்ட அனைத்து சமூக மக்களின் (பெரியோர் மற்றும் இளையோர்) மனதில்  அங்குச் செல்வோமா  எனக் கேள்வி எழுந்தது!

ரேடியோவில்  உறியடி  விளையாட்டனது  இருபுறம் கயிறுக் கட்டி நடுவில் ஒரு பானை தொங்க விடுபட்டு, விளையாட்டில் கலந்துக் கொள்ளும் சிறு பிள்ளைகளின் கண்ணை ஒரு துணியால் கட்டி, கையில் ஒரு கொம்புக் கட்டையுடன் அந்தப் பானையை உடைக்க வேண்டும் என ஆரவாரச் சத்தத்துடன் தொடங்கியது விளையாட்டு என அறிவித்தனர்!

இந்த ஆரவார சத்தத்தைக் கேட்ட இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரின் கால்கள் அவ்விடத்தை நோக்கிச் சென்றனர். உறியடி விளையாட்டில் கலந்துக் கொண்ட சிறுப் பிள்ளைகளுக்கு கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவரால் பரிசுகள் வழங்கப்பட்டன! ரேடியோவில்  இரண்டாம் விளையாட்டாக மெதுவான வேகம் குரைவான சைக்கிள் மிதிவண்டி போட்டி அறிவித்தனர், அப்போது அனைத்து சமூக இளையோர்கள் மற்றும் பெரியோர்கள் வரை வந்துச் சேர்ந்தனர், இதனைப் பார்த்த சிறு பிள்ளைகளுக்கு  அவ்வளவு ஆனந்தம் ஆழ் மனதில்! மிதிவண்டி போட்டி தொடங்கியவுடன் அனைவரும் கைதட்டி  விசில் அடித்து உற்சாகம் செய்தனர், இதனை பார்த்த கிராமத்து பஞ்சாயத்துத் தலைவருக்கு மனதில் நெகிழ்ச்சியாக இருந்தது.

மிதிவண்டிப் போட்டியில் கலந்து வெற்றிப் பெற்ற சிறு பிள்ளைகளுக்கு  அனைத்து சமூகத்திலும் உள்ள பெரியோர்களை மேடைக்கு   வரவழைத்து பரிசுகளைக் கொடுக்கச் செய்தனர்! இந்நிகழ்ச்சியை மேடையின் கீழே பார்த்துக் கொண்டிருந்த அனைத்து சமூக மக்களின் கைதட்டலும், பரவசமான அகத்தின் அழகு  சிரிப்பைப் பார்த்துக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஆனந்த கண்ணீருடன் மேடையில் ரசித்து நின்றுக் கொண்டிருந்தார்.மூன்றாம் போட்டியாக சிறு பிள்ளைகளின் பேச்சீல் கம்பீரம் மற்றும் கண்ணியம் வளர்க்கச் சிறப்புப் பட்டிமன்றம் வைக்கப்பட்டது, அதன் தலைப்பு கல்வி அவசியம் தேவை, தேவையில்லை நடுவராக பஞ்சாயத்துத் தலைவர் தேர்ந் தெடுக்கப்பட்டார்!

பத்து சிறு பிள்ளைகள் கலந்துக் கொண்டுக் காரசாரமான, நகைச்சுவைக் கலந்த உரையாடல் காணப்பட்டது! அப்போது ரோந்துச் சென்ற காவல் துறை அதிகாரிகள்  கிராமத்திற்குள் வந்தார்கள் அவர்களை மக்கள் பொன்னாடைக் கொடுத்து வரவேற்றனர்.

அம்மேடையில் நடந்த சிறு பிள்ளைகளின் பட்டிமன்றத்தை இரசித்தவாறு அங்குள்ள வெவ்வேறு சமூக மக்களின் முகத்திலுள்ள சந்தோஷத்தையும், இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தோள்மேல் கைப் போட்டு பேசுவதையும் கண்டு நெகிழ்ச்சியானார்கள். பின்னர் பட்டிமன்றத்தில் சிறப்பாக பேசிய சிறு பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கி,  புத்தாண்டின் சிறப்புரையாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் பண்பாடு, கலச்சாரத்தை மக்களுக்கு எடுத்துரைத்து விடைப்பெற்றனர்! மக்களும் பழைய ஆண்டில் செய்த பிழைகளை உணர்ந்து! புதிய ஆண்டில் அன்பு, சகோதரத்துவம் கடைப்பிடிக்க இனிப்புகளை பரிமாற்றம் செய்தும் உண்ணும்! ஒருவரை ஒருவர் கைக்கோரத்து சமாதானம் கூறி பிரிந்து அவர்கள் வீட்டிற்கு    சென்றனர். 


-உண்மையுள்ள 

ஆ.வினோத்குமார்                                              

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0