'அந்த மேன் ஆப் தி மேட்ச் அவார்டை எடுத்து வைங்க!' - சாம்சன் ருத்ரதாண்டவம்; இந்தியா அபாரம்!

Mar 5, 2026 - 22:30
 0
'அந்த மேன் ஆப் தி மேட்ச் அவார்டை எடுத்து வைங்க!' - சாம்சன் ருத்ரதாண்டவம்; இந்தியா அபாரம்!

உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் வான்கடேவில் ஆடி வருகின்றன. சாம்சனின் அதிரடியான தொடக்கத்தோடு இந்திய அணி இங்கிலாந்துக்கு இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருக்கிறது.

Ind vs Eng
Ind vs Eng

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக்தான் டாஸை வென்றிருந்தார். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதுவே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. குறிப்பாக, ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் முழுவதையும் சாம்சன் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். சாம்சன் எதாவது ஒரு போட்டியில் மட்டுமே அடிப்பார், மற்ற போட்டிகளில் சொதப்பவே செய்வார்.

அவரிடம் ஒரு சீரான தன்மை இருக்காது என்கிற விமர்சனம் எப்போதும் உண்டு. வெஸ்ட் இண்டிஸூக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்களௌ விளாசியிருந்த சாம்சன், இந்தப் போட்டியிலும் அதே பார்மில் அப்படியே தொடர்ந்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே புல் ஷாட்டோடு ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து பாசிட்டிவாக தொடங்கினார்.

அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே வெளியேறினாலும், எந்த சுணக்கமும் இல்லாமல் சாம்சன் அப்படியே அதே வேகத்திலேயே ஆடினார். இஷான் கிஷனும் அவருக்கு ஒத்துழைத்து அதிரடி காட்டினார். சாம்சனை கட்டுப்படுத்த முடியாமல் நான்கு பௌலர்களை ப்ரூக் பவர்ப்ளேயில் பயன்படுத்தியிருந்தார். எந்த வியூகமும் சாம்சனுக்கு எதிராக ஒர்க் அவுட் ஆகவில்லை. இடையில் ஒரு கேட்ச் ட்ராப் வேறு.

Samson
Samson

க்ரீஸை நன்றாக பயன்படுத்தி பின்னங்காலை நன்றாக ஊன்றி ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஸ்லோயர் ஒன்களையும் அநாயசமாக சிக்சராக்கினார். சதத்தை நோக்கி நகர்வார் என நினைக்கையில் 89 ரன்களில் வில் ஜாக்ஸின் பந்திலேயே அவுட் ஆகினார். இந்தப் போட்டியிலும் 'ஆட்டநாயகன்' விருதை தட்டிச் செல்லும் பெர்பார்மென்ஸ் இது..

ஆதில் ரஷீத், வில் ஜாக்ஸ் வீசியதால் துபே பிரமோட் ஆகி மேலே ஆட வந்தார். அவரும் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து ரன் அவுட் ஆகியிருந்தார். கடைசியில் திலக் வர்மா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட இந்திய அணியின் ஸ்கோர் எகிறியது. கடைசியில் ஹர்திக்கும் சில சிக்சர்களை பறக்கவிட இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை எடுத்தது.இங்கிலாந்தின் பிரதான பௌலரான ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ரன்களை கொடுத்து அடி மேல் அடி வாங்கியிருந்தார்.

இங்கிலாந்துக்கு 254 ரன்கள் டார்கெட். இமாலய சவாலில் சாதிக்குமா?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0