தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

Apr 25, 2026 - 19:31
 0
தேனி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு; தொடரும் விபத்துகள்

தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்குச் சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் (எ) தீனா ஆகிய நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

தேர்தல் விடுமுறை காரணமாக இரண்டு நாள்கள் பணிக்கு யாரும் வராமல் தொழிற்சாலை மூடிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு நாள்களுக்குப் பிறகு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வந்த தினேஷும், சூர்யாவும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிப்பதற்காக மூலப்பொருட்கள் வைத்துள்ள அறையைத் திறந்து உள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டு அறையைத் திறந்த சூர்யாவும் தினேஷும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் .

இதனைப் பார்த்த அவர்களுடன் பணிபுரிய வந்த மற்ற இருவரும் வெளியே அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் உடல் சிதறி கிடந்த இறந்தவர்களின் உடற்பாகங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தேனி பட்டாசு ஆலை வெடிவிபத்து
தேனி பட்டாசு ஆலை வெடிவிபத்து

மேலும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் வெடி விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பம் நகர் பகுதியில் பட்டாசு ஆலை இல்லாத சூழ்நிலையில் நடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்தப் பட்டாசு ஆலை புதிதாகத் திறக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0