`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' - அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Nov 03, 2026 - 17:00
0
`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' - அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை மொட்டை அடித்துவிடுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசி இருப்பது, சர்ச்சையாகிருக்கிறது.

அவர் பேசும்போது,

``நம் வீட்டுப் பிள்ளைகளை நீங்கள்தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் முடிவெட்டும் முறையை திருத்தம் செய்ய வேண்டும், வழக்கமான முறையில் முடி திருத்தி வரும் மாணவர்களை பள்ளிக்குள் அனுமதியுங்கள்.

தப்பு தப்பாக முடிவெட்டி வந்தால், முதலில் மொட்டையடித்துவிடுங்கள். தப்பே இல்லை, என் வீட்டு பிள்ளையாக நினைத்து இதைச் சொல்கிறேன். அப்படிச் செய்தால்தான் சரியாக முடி திருத்தி வருவார்கள். இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆட்சியர் மூலம் அறிக்கை வெளியிட வேண்டும்.

மாணவர்கள் முடி திருத்தி வரும் முறையில்தான் முதல் தவறே நடக்கிறது, ஸ்டைலாக முடி திருத்தும் முறையை பெற்றோர் ஏன் அனுமதிக்கிறீர்கள்?முட்டாங்காலுக்கு மேல் ஸ்டைல் என பேன்ட் அணிந்து வருவதையும் ஏன் பெற்றோர்கள் அனுமதிக்கிறீர்கள்.

காவல் நிலையத்தில்கூட ஒருவருடைய தோற்றத்தைப் பார்த்து தவறு செய்திருக்கக்கூடும் எனக் காவல்துறை சொல்வது இயற்கை. ஒருவரது தோற்றம்தான் அவனது குணாதிசயத்தை நிர்ணயிக்கிறது. ஒருவர் நல்லது செய்வது, தவறு செய்வது இதெல்லாம் விசாரணைக்கு பின்னர்தான் முடிவு செய்வார்கள். ஆனால் ஒருவரைப் பார்த்தவுடன் அவரது உடை, ஹேர்ஸ்டைலைக் கண்டுதான் அவரது குணாதிசயத்தை முடிவு செய்வார்கள்.

எனவே ஃபார்மல் முறையில் மட்டுமே மாணவர்கள் முடி திருத்தி வரவேண்டும் என்பதை, நமது விருதுநகர் மாவட்டத்தில் உறுதி செய்ய கல்வித்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் ஒரு தாயாகத்தான் சொல்கிறேன் அமைச்சராக அல்ல, ஏனென்றால் நமது பிள்ளைகள் தவறு செய்யாமலேயே மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது, அதற்கு பெற்றோரே காரணமாக இருக்கிறார்கள். நம்ம பிள்ளை நம்ம பேச்சை கேட்காமல் வளர்ப்பது பெற்றோரின் தவறுதான், பெற்றோர்தான் அதனை சரி செய்ய வேண்டும், குழந்தைகள் பெற்றோர் பேச்சை கேட்கவில்லை என்றால் அவர்களை திட்டுவதோ அடிப்பதோ கூடாது, ஆனால் அவர்களிடம் எமோஷனலாக பேசினால் நிச்சயமாக கேட்பார்கள் “

என்று பேசினார் அமைச்சர் ஜெகதீஸ்வரி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User