இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?

Nov 03, 2026 - 14:00
0
இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் செக் செய்வதை எளிமையாக்கியிருக்கிறது அதன் அமைப்பு.

இனிமேல் EPFO வலைதளம் அல்லது UMANG ஆப்பிற்குள் சென்று பேலன்ஸ் பார்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய வாட்ஸ்ஆப்பிலேயே பி.எஃப் பேலன்ஸை எளிதாகச் செக் செய்துகொள்ளலாம்.

எப்படி அது?

> உங்களுடைய மொபைல் போனில் 87964 41800 - இந்த எண்ணைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

> இந்த எண்ணில் இருக்கும் வாட்ஸ்ஆப் சாட்டில் ‘Hi’ அனுப்பவும்.

அடுத்ததாக, உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

EPFO
EPFO

> அதன் பின், பி.எஃப் பேலன்ஸ் செக், கடைசி 5 பரிவர்த்தனைகளைப் பார்க்க, பாஸ்புக் டவுன்லோடு என மூன்று ஆப்ஷன்கள் வரும்.

> அதில் உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, ‘Send’ கொடுக்கவும்.

> இப்போது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த OTP-ஐ அதே சாட்டில் பதிவிடுங்கள்.

> இதன் பின், உங்களுடைய UAN நம்பர் வரும். இதன் பின், உங்களுக்குத் தேவையான விஷயத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.

பேலன்ஸ் மட்டும்தானா..?

EPFO உடனான வாட்ஸ்ஆப் சாட்டில் பி.எஃப் பேலன்ஸ் மட்டுமல்ல... உங்களுடைய கடைசி 5 பரிவர்த்தனைகளைப் பார்க்க முடியும்.

உங்களுடைய பாஸ்புக்கையும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

ஆனாலும், சின்னப் பிரச்னை!

இந்த வசதி கடந்த நவம்பர் 1-ம் தேதியிலிருந்துதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய உள்ளீடுகள் சில நேரங்களில் வேகமாகப் பிராசஸ் ஆவதில்லை. OTP லிங்க்கில் சில பிரச்னைகள் உள்ளன.

ஆனால், கொஞ்சம் நேரம் கழித்து முயற்சித்தால், நாம் செக் செய்ய நினைத்ததைப் பார்க்க முடிகிறது.

இருந்தாலும், இந்தச் சாட்பாட் விரைவாகச் செயல்படுவதும், தொழில்நுட்பக் கோளாறு இல்லாமல் செயல்படுத்துவதும் அரசின் பொறுப்பு.

இதனால், இது விரைவில் சரிசெய்யப்படும் என்று நம்புவோம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User