ரோலக்ஸ் : 'ஹீரோவா... வில்லனா... லோகேஷை வந்து என்னைப் பார்க்க சொல்லுங்க.!' - சூர்யாவின் பதில்

Nov 03, 2026 - 14:00
0
ரோலக்ஸ் : 'ஹீரோவா... வில்லனா... லோகேஷை வந்து என்னைப் பார்க்க சொல்லுங்க.!' - சூர்யாவின் பதில்

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'சீன்' (Scene).

சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சீன்' படத்தில்...
'சீன்' படத்தில்...

சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வரும் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று (நவ.3) தெலுங்கு ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்ட சூர்யாவிடம் ரசிகர்கள் 'ரோலக்ஸ்' குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

அதற்கு பதிலளித்த சூர்யா, " 'ரோலக்ஸ்' குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அதற்கான நிறைய வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

சூர்யா
சூர்யா

லோக்கியிடம் (லோகேஷ் கனகராஜ்) சொல்லி என்னைக் கூப்பிட சொல்லுங்கள். என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்.

ஹீரோவாக நடிகட்டுமா? அல்லது வில்லனாக நடிகட்டுமா? எது சிறந்த ஒன்றாக இருக்கும்.

வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்குமோ? ஹீரோவாக நிறைய படங்களில் நடித்துவிட்டேன்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User