ஏழு கடல் ஏழு மலை: "ராம் மாதிரி எனக்கு கதை சொல்ல வரலையேன்னு நினைச்சிருக்கேன்.!"- வெற்றிமாறன்

Sep 24, 2026 - 13:31
0
ஏழு கடல் ஏழு மலை: "ராம் மாதிரி எனக்கு கதை சொல்ல வரலையேன்னு நினைச்சிருக்கேன்.!"-  வெற்றிமாறன்

ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், " ராம் உடன் எப்போது டீ கடையில் பேச ஆரம்பித்தாலும் 5, 6 மணி நேரம் பேசுவோம். 2 மணிக்கு கடையை மூடி 4 மணிக்கு திறப்பார்கள் அப்போதும் அங்கு நின்று பேசிக்கொண்டிருப்போம்.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்

நான் உதவி இயக்குநராக இருக்கும்போது இவர்களை மாதிரி கதை சொல்ல வரவில்லையே என்று இரண்டு பேரை நினைத்திருக்கிறேன். ஒருவர் ராம் இன்னொருவர் பாலு மகேந்திராவிடம் பணிப்புரிந்த தங்கவேலவன். இவர்கள் இருவர் கதைச் சொல்லும்போது எனக்கு அந்த உணர்வு வரும்.

ராம் எப்படி வளர்ந்துகொண்டே இருக்கிறாரோ அதேபோல அவருடைய கதைகளும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ரொம்ப எமோஷனலாக இருந்தது. அவருடைய பேரன்பை இன்னும் விரிவுப்படுத்தி இருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User