"அவர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க 'நோ' சொன்னால்தான்.!"- யுவன் சங்கர் ராஜா குறித்து ராம்
ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இருவரும் இசையமைத்திருக்கிறார்கள்.
அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ராம் யுவன் சங்கர் ராஜா குறித்து பேசியிருந்தார். "நா.முத்துக்குமார் தான் என்னை யுவனிடம் அழைத்து சென்றார்.
'கற்றது தமிழ்' படத்திற்கு இசையமைப்பதற்காக ஒரு 30 நிமிடம் கதைச் சொல்லியிருப்பேன்.
கதைகேட்டதும் நான் இசையமைக்கிறேன் என்று சொன்னார். அப்போது இருந்து தொடங்கியது தான் இந்தப் பயணம்.
அவர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க 'நோ' சொன்னால்தான் நான் வேறொரு இடத்திற்கு செல்வேன்.
என் படங்களுக்கு இசையமைப்பவர் என்பதைத் தாண்டி அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்.

'கற்றது தமிழ்', 'தரமணி', 'தங்க மீன்கள்', 'பேரன்பு' என என்னுடைய எல்லாப் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
'பறந்து போ' படத்திற்கு மட்டும் அவர் துபாயில் இருந்ததால் இசையமைக்க முடியவில்லை. அதனால் அவருடைய நண்பர் சந்தோஷை இசையமைக்க பரிந்துரைத்தார்." என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)