உதயநிதியின் சர்ச்சை பேச்சு: "நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" - குஷ்பு| Live Updates

Aug 04, 2026 - 10:01
0
உதயநிதியின் சர்ச்சை பேச்சு: "நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" - குஷ்பு| Live Updates

பாஜக நிர்வாகி குஷ்பு

உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கேட்டேன். அது மிகவும் அருவருப்பான, மலிவான மற்றும் ஆழமான இழிவுபடுத்தும் பேச்சாக இருந்தது.

அவர் எந்த அரசியல் கலாச்சாரத்தை வாரிசாகப் பெறத் துடிக்கிறாரோ, அதையே அது பிரதிபலிக்கிறது.

இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தவும், என்றாவது ஒருநாள் இந்த மாநிலத்தை ஆளவும் ஆசைப்பட்டால், கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். பெண்களை ஏசுவது, இழிவுபடுத்துவது மற்றும் அவமானப்படுத்துவதை ஒருவகை அரசியல் நாடகமாக மாற்றி, தங்கள் விசுவாசிகளின் கைதட்டல்கள், விசில்கள் மற்றும் சிரிப்பொலிகளில் திளைக்கும் நபர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இதைப் பற்றி என்னை விட வேறு யாருக்குச் நன்றாகத் தெரியும்?

இத்தகைய கீழ்த்தரமான மொழியை இயல்பாக்குபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.

பெண்களின் கண்ணியம் அரசியலுக்குப் பலியாக்கப்பட்டுவிட்டால், நாளை உங்கள் சொந்தக் குடும்பம் உட்பட எந்தக் குடும்பமும் இதேபோன்ற தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியாது.

அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், பொது தளத்துப் பேச்சுக்கு என்று ஒரு எல்லை இருக்க வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும்.

உங்கள் இஷ்டத்திற்கும் ஆசைக்கும் ஆட்டுவிக்கும் காய்களாக அவர்களை நடத்தக் கூடாது.

உங்கள் அரசியல் எதிரியின் திறமை, தொலைநோக்குப் பார்வை அல்லது தலைமைத்துவத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாதபோது, தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசுவதும் ஆபாசமாக நடந்துகொள்வதும் எளிதான தப்பித்தல் வழியாகிவிடுகிறது. உதயநிதிஸ்டாலின் மற்றும் அவரது தந்தை ஸ்டாலின் ஆகியோர் பல ஆண்டுகளாகப் பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளனர், ஆனால் அதுவே பொது வாழ்க்கையின் தரநிலையாக மாறிவிடக் கூடாது.

ஒரு பொது மேடையில் திருமதி த்ரிஷாவை இழிவுபடுத்தியதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தான் செய்த இந்த அசிங்கமான தவறை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கேட்கும் தைரியமும் நாகரிகமும் அவருக்கு இருக்கிறதா என்று பார்ப்போம்!

தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்

புகார் கடிதம்
புகார் கடிதம்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா

நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்

அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

'அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்துப் போராட்டம்' என நேற்று தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷாவைக் குறிப்பது போல ஆபாசமாகப் பேசியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

அவரது ஆபாசப் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதன் தொகுப்பு இது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User