"சச்சின், கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும்" - சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்

Jun 08, 2026 - 18:01
0
"சச்சின், கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும்" - சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல்லில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் சூர்யவன்ஷிக்கு நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

'IANS' ஊடகத்திற்குப் பேட்டி அளித்த கங்கனா, "நான் உண்மையிலேயே சூர்யவன்ஷியை மனதார வாழ்த்துகிறேன். இவர் நாட்டிற்காக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

அவர் மீது நெருக்கடியைச் சுமத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை. அவர் சிறப்பாக விளையாடுகிறார். உலக கோப்பை போன்ற வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User