"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

Sep 24, 2026 - 16:00
0
"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

பல ஆண்டுகளாக குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியிருக்கிறார். இந்நிலையில், ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் காங்கிரஸ் கட்சியின் ரஞ்சன் குமார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

Ranjan Kumar
Ranjan Kumar

கடந்த ஆட்சியில் பிரபல தொழிலதிபரான ஜெம் வீரமணி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறைக்குக் கிடைத்த வீடியோக்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்காமல், பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டடைய முடியவில்லை எனக் கூறி காவல்துறையினர் அந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

காவல்துறையின் விசாரணையில் திருப்தியடையாத நீதிபதி பத்மா இந்த வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டோரைக் கண்டுபிடித்து அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெம் வீரமணியை காவல்துறை கைது செய்திருக்கிறது.

புகார்
புகார்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு தலைவரான ரஞ்சன் குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் ஜெம் வீரமணி குறித்து புகாரளித்ததாக பகீர் கிளப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி கண்ணனுக்கும் இன்ஸ்பெக்டர் மகேஷுக்கும் அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் புகார் மனுவையும் வெளியிட்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தும் ஜெம் வீரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ரஞ்சன் குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User