Rain Alert: நாளை 'மிகக் கடும் புயலாக' மாறும் Arnab; தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? இன்று ஆரஞ்சு அலர்ட்!

Oct 26, 2026 - 13:00
0
Rain Alert: நாளை 'மிகக் கடும் புயலாக' மாறும் Arnab; தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? இன்று ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் தற்போது ‘அர்னாப்’ புயல் உருவாகியுள்ளது.

அர்னாப் புயல்

இது குறித்த இந்திய வானிலை மையத்தின் அப்டேட்...

“மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளது.

இன்று (அக்டோபர் 26, 2026) காலை 05:30 மணி நிலவரப்படி, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

அர்னாப் புயல்
அர்னாப் புயல்

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்டோபர் 26) நள்ளிரவுக்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ‘கடும் புயலாக’ வலுவடையும்.

அதன் தொடர்ச்சியாக, அதே பகுதியில் அக்டோபர் 27-ஆம் தேதி ‘மிகக் கடும் புயலாக’ தீவிரமடையக் கூடும்.

அதன் பின்னர், வடமேற்கு திசையில் நகர்ந்து, 2026-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி முற்பகலுக்குள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்பகுதியில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே மிகக் கடும் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும்.

அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னாப் புயலால் தமிழ்நாட்டிற்கு பிரச்னை?

அர்னாப் புயலால் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு வரும் என்று எந்தவொரு எச்சரிக்கையும் இதுவரை இந்திய வானிலை மையத்தினால் கொடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிற்கு அலர்ட்..?

ஆனால், இந்திய வானிலை மையம் நேற்று (அக்டோபர் 25, 2026) தமிழ்நாட்டிற்கு 31-ம் தேதி வரை மழை அலர்ட் வழங்கியுள்ளது.

இந்திய வானிலை மைய அப்டேட்
இந்திய வானிலை மைய அப்டேட்

இந்திய வானிலை மையத்தின் நேற்றைய அப்டேட்டின் படி,

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழை பெய்யும். இங்கு இன்று ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27-31-ம் தேதியில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இந்திய வானிலை மையம் நாளை (அக்டோபர் 27, 2026) இந்தப் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User