"அண்ணாமலை படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறேன்" - சிவகார்த்திகேயன் ஷேரிங்

Oct 26, 2026 - 13:30
0
"அண்ணாமலை படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறேன்" - சிவகார்த்திகேயன் ஷேரிங்

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கமென்ட் பார்ப்பது, படிப்பது இல்லை. என் சோஷியல் மீடியா பணிகளை என் டீம் பார்க்கிறது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இப்போது ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அடுத்து 2 பட ஸ்கிரிப்ட் வொர்க் நடந்துக்கொண்டு இருக்கிறது. தவிர, என் தயாரிப்பில் 3 படங்கள் உருவாகிறது. ஆக தற்போது 7 கதைகள் மனதிற்குள் இருக்கிறது.

வீட்டுக்கு, குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும். 3 குழந்தைகள், கடைசி மகனுக்கு இரண்டடைர வயது. சோஷியல் மீடியாவில் கவனம் செலுத்தினால் அவனுடன் விளையாட முடியாது. மேலும் படத்துக்கு உடல் அளவில் தயாராக நேரம் ஒதுக்க வேண்டும்.

நம்மை நம்பி காசு போடுகின்ற தயாரிப்பாளருக்கு வேலை பார்க்க வேண்டும். அவ்வப்போது ரசிகர்களை சந்திக்க வேண்டும். இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது, முகம் தெரியாத ஒருவர் போடுகின்ற நெகட்டிவ் கமென்ட் என்னை பாதிக்காது" என்றிருக்கிறார்.

ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்த் - சிவகார்த்திகேயன்

தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் எந்த படத்தை ரீமேக் செய்து நடித்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பொதுவாகவே எனக்கு மற்ற நடிகர்களின் படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் விருப்பமில்லை.

ஒரு வேளை எந்த படத்தை ரீமேக் செய்து நடித்தால் எனக்கு செட் ஆகும் என்று யோசித்தால், தலைவரின் அண்ணாமலை படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User