சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

Mar 19, 2026 - 14:01
 0
சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இணையத்தில் கேலியும், கிண்டலுமாக மாறி இருக்கிறது. சமூக வலைதள பக்கத்தில் தம்பதியினர் திருமணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் புதுமையாக சினிமா பாணியில் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இருவரும் சேறு நிறைந்த தண்ணீரில் கண்களை மூடியபடி மிதந்து கொண்டிருந்தனர்.

தங்களது காதல் முடிவில்லாதது என்பதை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் கண்களை மூடிக்கொண்டு தண்ணீரில் மிதந்தபடி போஸ் கொடுத்தாலும், அவர்கள் அதற்காக தேர்ந்தெடுத்த இடம் மிகவும் மோசமாக இருந்ததால் சமூக வலைதளங்களில் அது கேலிப்பொருளாக மாறியுள்ளது.

அந்தத் தம்பதியினர் அழுக்கு நீர் நிறைந்த குளத்தில் படுத்துக் கிடக்க, ஒரு புகைப்படக் குழுவினர் முழங்கால் அளவு சேற்றில் நின்று கொண்டு அவர்களுக்குத் தீவிரமாக போஸ் சொல்லிக் கொடுக்கின்றனர். அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது ஒரு ரொமான்டிக் காட்சி போல இல்லை என்றும், ஏதோ ஒரு திரில்லர் படம் அல்லது குற்றப்புலனாய்வுத்துறையின் காட்சி போல இருப்பதாகவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும், ப்ரீ-வெடிங் ஷூட்டிற்காக தம்பதியினர் இவ்வளவு தூரம் செல்வது விசித்திரமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கு படித்துவிட்டு, கடைசியில் திருமணப் புகைப்படக் கலைஞராக மாறினால் இப்படித்தான் நடக்கும் என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார். ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து பணத்தை வீணடிக்க வேண்டும்? உங்களுக்குத் தேவையானபடி AI மூலம் எடிட் செய்து கொள்ளலாமே என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த சரியான தகவல் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், நவீன ப்ரீ-வெடிங் டிரெண்டுகள் (trends) எந்தளவுக்கு வினோதமாகச் செல்கின்றன என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0