`வியக்கத்தக்க வகையில் சிறப்பான பங்களிப்பு' - தவெக-வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

May 04, 2026 - 19:31
0
`வியக்கத்தக்க வகையில் சிறப்பான பங்களிப்பு' - தவெக-வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வாக்காளர்களுக்குத் தனது நன்றியையும், வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ``தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்தத் தேர்தலில் வியக்கத்தக்க வகையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு எப்போதும் எவ்வித முயற்சியையும் கைவிடாது. மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User