பக்கவாத விழிப்புணர்வு முகாம் நடத்திய அப்போலோ மருத்துவமனை: ‘FAST’ மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணர்வு

Oct 31, 2026 - 00:00
0
பக்கவாத விழிப்புணர்வு முகாம் நடத்திய  அப்போலோ மருத்துவமனை: ‘FAST’ மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணர்வு

சென்னை பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமம் பள்ளி மாணவர்கள், பக்கவாத பாதிப்பின் அறிகுறிகளை அறிந்துகொள்வதன் அவசியத்தையும், அதற்கான உடனடி மருத்துவச் சிகிச்சையை எவ்வாறு பெறவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில், சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் அப்பல்லோ ஷைன் பௌண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‘ஃபாஸ்ட்’ (FAST) என்ற எழுத்துக்களை மனிதச் சங்கிலி வடிவில் மாணவர்கள் உருவாக்கினர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனைகளின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமம் பள்ளியின் முதல்வர் ஸ்ரீ பி.ஜி. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி: 1983ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி, அப்போலோ குழுமத்தின் முதல் மருத்துவமனையைத் தொடங்கிய போது, சுகாதாரத் துறையில் ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டது. இன்று, 78 மருத்துவமனைகள், 10,900-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 7,200+ மருந்தகங்கள், 300+ கிளினிக்குகள் மற்றும் 2,500 நோயறிதல் மையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார சேவை குழுமமாக அப்போலோ விளங்குகின்றது. நோயாளிகளுக்கு உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டுவர அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. 3,00,000 க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் மற்றும் 2,00,000 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ள இது, உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. நோயாளிகளுக்கு உலகின் மிகச்சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டுவர அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்கள் சிறப்பான மருத்துவச் சேவையை வழங்கி, இந்த உலகை நாம் வந்தடைந்ததை விட சிறந்ததாக மாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User