Pawan Kalyan: "நல்ல நண்பர்களாகத் தொடர்வோம்" - பிரிவை அறிவித்த பவன் கல்யாண் - அன்னா

Nov 10, 2026 - 09:31
0
Pawan Kalyan: "நல்ல நண்பர்களாகத் தொடர்வோம்" - பிரிவை அறிவித்த பவன் கல்யாண் - அன்னா

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் 1997-ல் நந்தினி என்பவரைத் திருமணம் செய்து 1999-ல் பிரிந்தார். பின்னர் 2009-ல் நடிகை ரேணு தேசாயைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களது பந்தமும் 2012-ல் விவாகரத்தில் முடிந்தது.

அதற்குப் பிறகு ரஷ்யக் குடிமகளான அன்னா கொனிடேலாவை பவன் கல்யாண் 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், தற்போது அன்னாவையும் பிரிவதாக அறிவித்திருக்கிறார். இதன்மூலம் பவன் கல்யாணின் மூன்றாவது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.

பவன் கல்யாண் - அன்னா கொனிடேலா
பவன் கல்யாண் - அன்னா கொனிடேலா

பவன் கல்யாணும் அன்னா கொனிடேலா ஆகிய இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனசேனா கட்சி வெளியிட்ட பவன் கல்யாண் - அன்னா தம்பதியின் கூட்டு அறிக்கையில், ``எங்களது வாழ்க்கையின் ஒரு கணிசமான பகுதியை ஒன்றாகக் கழித்த பிறகு, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன் பிரிந்து செல்வது என நாங்கள் இருவரும் முடிவு செய்துள்ளோம். எங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தபோதிலும், நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்வோம்.

எங்களது குழந்தைகளின் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் எப்போதும் எங்களின் முதன்மை முன்னுரிமையாகவே இருக்கும். அவர்களை வளர்க்கும் பொறுப்பை நாங்கள் இருவரும் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம். இந்தத் தனிப்பட்ட மாற்றத்தின்போது, பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் எங்களது தனிப்பட்ட உரிமையை மதித்து நடக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இத்தனை ஆண்டுகளாக எங்களோடு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருப்பினும், இந்தப் பிரிவுக்கான காரணம் குறித்தோ அல்லது விவாகரத்து தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தோ அந்த அறிக்கையில் எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் அவர்களின் 13 கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User