கிரெடிட் கார்டு: வசதியா? வட்டி வலையா? சரியாகப் பயன்படுத்த 7 விதிகள்!

Nov 10, 2026 - 18:01
0
கிரெடிட் கார்டு: வசதியா? வட்டி வலையா? சரியாகப் பயன்படுத்த 7 விதிகள்!

புனேவைச் சேர்ந்த 47 வயது மீனா கேல்கர், ரிவார்டு புள்ளிகள் (Reward Points), தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் ஆகியவற்றிற்காகப் பல கார்டுகளைப் பயன்படுத்தி வந்தார்.

ஆனால், செலவழித்த பணத்தை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று அவர் திட்டமிடவில்லை. கொரோனா காலத்தில் சம்பளம் தாமதமானதால், ஒவ்வொரு மாதமும் ‘Minimum Due’ (குறைந்தபட்சத் தொகை) மட்டுமே செலுத்தி வந்தார்.

விளைவு? ஜூன் 2020-ல் அவரது கிரெடிட் கார்டு கடன் ₹2.5 லட்சத்தைத் தாண்டியது. அந்தக் கடனை முழுமையாகத் தீர்க்க நவம்பர் 2022 வரை ஆனது. அத்துடன், அவரது வீட்டுக் கடன் வாங்கும் திட்டத்தையும் இந்தக் கடன் கடுமையாகப் பாதித்தது.

கிரெடிட் கார்டில் பல ரிஸ்குகள் இருந்தாலும்கூட, இந்தியாவில் செப்டம்பர் 2026 நிலவரப்படி, 12.53 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஒரே மாதத்தில் மட்டும் ₹2.04 லட்சம் கோடி கார்டுகள் மூலம் செலவிடப்பட்டுள்ளது!

credit card
credit card

கிரெடிட் கார்டைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த இந்த 7 விதிகளைப் பின்பற்றுங்கள்:

  1. முழுத் தொகையையும் செலுத்துங்கள்: ‘Minimum Due’ என்பது கடனைத் தீர்ப்பதற்கான வழியல்ல. ஒவ்வொரு மாதமும் ‘Total Amount Due’-ஐ (முழுத் தொகையை) செலுத்துங்கள்.

  2. 30% விதியைப் பின்பற்றுங்கள்: உங்கள் மொத்த கிரெடிட் வரம்பில் (Limit) 30%-க்குள் செலவிடுவது CIBIL ஸ்கோரை உயர்த்தும் நல்ல பழக்கம்.

  3. 45 நாள் அவகாசத்தை தவறாக நம்பாதீர்கள்: இது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்தனியாகக் கிடைக்கும் அவகாசமல்ல. பில்லின் முழுத் தொகையையும் குறித்த காலத்தில் செலுத்தினால்தான் வட்டியில்லா அவகாசம் கிடைக்கும்.

  4. ATM-ல் ரொக்கம் எடுக்காதீர்கள்: கிரெடிட் கார்டு மூலம் ரொக்கம் எடுத்தால், எடுத்த வினாடியிலிருந்தே அதிக வட்டியும் கட்டணங்களும் தொடங்கும்.

  5. Reward Points-ஐப் பயன்படுத்துங்கள்: புள்ளிகள் காலாவதியாகும் முன் பயன்படுத்துங்கள். அதேசமயம், புள்ளிகளுக்காக மட்டுமே தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள்.

  6. Auto-Pay வசதியை ஆன் செய்யுங்கள்: குறைந்தபட்சத் தொகைக்கு அல்ல; முழு பில் தொகைக்கும் Auto-Pay அமைக்கவும். பில் தேதியன்று கணக்கில் போதிய இருப்பு இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

  7. தேவையான கார்டுகளை மட்டுமே வைத்திருங்கள்: அதிக கார்டுகள், அதிக சலுகைகள் என்ற ஆசையில் செலவுகளைக் கட்டுப்பாட்டை மீற விடாதீர்கள்.

நினைவில் வையுங்கள்: கிரெடிட் கார்டு என்பது உங்களுடைய கூடுதல் வருமானம் அல்ல; அது ஒரு குறுகிய காலக் கடன்! வாங்கும் முன் யோசியுங்கள், செலவழித்த பிறகு அல்ல. பில் வருவதற்கு முன்பே திருப்பிச் செலுத்தத் தயாராக இருங்கள்.

Workshop on loans, nov 11 2026

லோன், EMI, கிரெடிட் கார்டு, கடன் வலைகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

நீங்கள் அடிக்கடி கடன் வாங்குபவரா? அல்லது கொடுப்பவரா? கடனில் சிக்காமல், அதனைச் சரியாகப் பயன்படுத்தும் சூட்சுமங்களை அறிய வேண்டுமா?

லாபம் வழங்கும் 'கடன்' பற்றிய சிறப்பு ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் கலந்துகொள்ளுங்கள்.

நாள்: நவம்பர் 11, 2026, புதன்
நேரம்: மாலை 07 - 8:30 மணி - இந்திய நேரம்
பேச்சாளர்: டீம் லாபம்

100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு இன்று இரவுடன் முடிவடைகிறது. முன்பதிவு செய்து நிகழ்ச்சிக்கான ஜூம் லிங்கை இ-மெயிலில் பெற: https://labham.money/events/webinar-nov11-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov11_2026

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User