OM: `உண்மை சம்பவங்கள்... தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலை?' - ராஜ்குமார் பெரியசாமி கூறியதென்ன?

Jun 19, 2026 - 14:32
0
OM: `உண்மை சம்பவங்கள்... தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலை?' - ராஜ்குமார் பெரியசாமி கூறியதென்ன?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஓம்'.

சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று (ஜூன்.18) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ராஜ்குமார் பெரியசாமி, " 'ஓம் என்பது ஆன்மிக சம்பந்தப்பட்ட தலைப்பு மாதிரி தெரிந்தாலும் இது உணர்வுப்பூர்வமான கதை. படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பல லேயர்களில் அர்த்தம் இருக்கிறது.

 'ஓம்'
'ஓம்'

அதற்கு தற்போது விளக்கம் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். 65 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். தனுஷ் நடித்த படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் தயார் ஆகிறது.

அதற்கு நடிகர்கள், கதைக்களம் என பல காரணங்கள் இருக்கிறது. தவிர, சினிமா பிஸினசும் முன்பை விட அதிகரித்திருக்கிறது. கார்த்திகேயன் என்ற கேரக்டரில் மம்முட்டி நடிக்கிறார்.

மற்றவர்களின் கேரக்டர்களை விரைவில் அறிவிப்போம். சூழ்நிலை காரணமாக மம்முட்டியை 6 மாதங்களாக என்னால் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் சென்னை வந்தவர் என்னிடம் கதை கேட்டார். அதில் அவருக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களையும் கேட்டார். உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார்.

தனுஷ், மம்முட்டி என 2 பேரும் தேசிய விருது பெற்றவர்கள். அவர்கள் தங்கள் கேரக்டரை உணர்ந்து அழகாக நடித்தனர். ஸ்ரீலீலா சம்பந்தப்பட்ட காட்சிகளை இப்போது எடுத்து வருகிறேன்.

அவர் டான்சில் மட்டுமல்ல, நடிப்பிலும் சிறந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடந்த செம்மரக் கடத்தல், என்கவுண்டர் சம்பந்தப்பட்ட கதையா என கேட்கிறார்கள். டீசரில் சில விஷயங்கள் காண்பித்து இருக்கிறோம். சில உண்மை சம்பவங்கள் பாதிப்பில் இந்த கதை உருவாகி இருக்கிறது.

 'ஓம்'
'ஓம்'

நான் இயக்கிய அமரன் ஒரு பயோகிராபி. 'ஓம்' அந்தவகை கதை தான். உண்மை சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதை எப்படி திரைக்கதையாக கொடுக்கிறோம் என்பதில் வெற்றி இருக்கிறது.

தமிழர்களை எந்த இடத்திலும் தவறாக காண்பிக்கவில்லை. திருவண்ணாமலைக்கும் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலையா என்பதை இப்போது சொல்ல முடியாது" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User