நெல்லை: மதுபோதையில் தகராறு; நண்பரைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

May 16, 2026 - 13:01
0
நெல்லை: மதுபோதையில் தகராறு; நண்பரைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பொதிகையடியைச் சேர்ந்தவர் வனராஜ். இவர், கடந்த 12-ம் தேதி பாபநாசம், லோயர் கேம்ப் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாகக்கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

2 நாட்களாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அவரது மகன் முருகலிங்கம் விசாரித்தார். தன் தந்தை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையம்
விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையம்

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி, பாபநாசம் லோயர் கேம்ப் ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கும், விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தியதில், காணாமல் போன முதியவர் வனராஜ்தான் என்பது தெரிய வந்தது.

போலீஸாரிடம் பேசினோம், ”வனராஜும் அவரது நண்பருமான வெள்ளத்துரை என்பவரும் கடந்த 12-ம் தேதி நடந்த வனப்பேச்சி அம்மன் கோயில் கொடை விழாவிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளத்துரை, கம்பால் வனராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதில் வனராஜ் உயிரிழந்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச்சென்ற வெள்ளத்துரை, லோயர் கேம்ப் ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் இறந்துகிடப்பதாகவும், அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸாருக்கு ஒருவர் போனில் தகவல் கூறியுள்ளார்.

Murder
Murder

தகவல் கூறியவர் குறித்து விசாரணை செய்த நிலையில்தான், தகவல் கூறியவர் வெள்ளத்துரை என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். தீவிரமாக நடத்திய விசாரணையில்தான் வனராஜுவை கம்பால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வெள்ளத்துரையைக் கைது செய்துள்ளோம்” என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User