என் இனிய...!

Jun 13, 2026 - 21:30
0
என் இனிய...!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

"ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, ஆனா...நாயை வளர்க்கல

இந்த சப்பாணியை தானே வளர்த்தா..." - சாதாரண மனிதன் பேசினது

இலக்கியம் போல இன்றளவும் போற்றி பேசப்படுகிறது.

தேனி பக்கத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதன் தன்னைப் போல உள்ளவர்களை..

கோடம்பாக்கம் எல்லை தாண்டி வந்து திரையில் காண்பித்தான்.

பாடல் காட்சிகள், ரயில் நிலைய காட்சிகள் தவிர பெரும்பாலான காட்சிகள்

ஸ்டுடியோ குள்ளே படமாக்கப்பட்ட நிலை மாறி முழுவதும் குக்கிராமம்

வரையில் சென்று அந்த மனிதர்களின் வாழ்க்கையை நமக்கு எடுத்துக் காட்டினான்.

முதல் படத்திலே முதல் காட்சியிலே யாரோ ஒரு பெண் ஒருத்தனுக்காக காத்திருப்பதை காட்டி நம் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஒரு புதிய உலகத்திற்கு அழைத்து சென்றார்...

என் இனிய...நம் இனிய பாரதிராஜா.

படத்தின் ஆரம்பத்தில் 'செந்தூரப்பூவே..செந்தூரப்பூவே' என்று சோகத்தை உள்ளடக்கிய பாடல்ஒலிக்கும்.

 ’16 வயதினிலே’
Actress Sridevi

அழகான மலைகள், மலர்கள், ஆறு, மரத்தின் இலை வழியாக சொட்டும் நீர்

தொடர்ந்து கிராமத்து ரயில் நிலையம் ஒன்றை காட்டுவார்கள்.

அங்கே ஒரு இளம் பெண் யாரையோ எதிர்பார்த்து காத்து நிற்பாள்.

தினமும் ரயில் வந்து போகிறது...அவளின் அவன்வரவில்லை.

தேடுகிறாள்...தேடுகிறாள்...அந்த ரயில் தன்னை கடந்து போகும் வரையில்.

பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது...அவளைப் பற்றிய அறிமுக உரையோடு.

70 களில் ரசிகர்களுக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவம்.

சாதாரண சாப்பாடு சாப்பிட வந்தவனுக்கு வட பாயசத்தோடோ அல்லது கரி விருந்தோ கிடைத்தால் எப்படி இருக்கும்...?

'ஆத்தா நான் பாஸாயிட்டேன்..' சத்தமாக சொல்லும் 'மயில்' அப்போதைய கனவுக்கன்னி ஸ்ரீதேவியாம்...

நம்ப முடியாது.

அப்படி மாற்றி இருந்தார் இமயமாக உயர்ந்த அவர்.

சப்பாணி, மயில், பரட்டையன், குருவம்மா என்று படத்தில் நடித்தவர்கள் பெயர் போடப்படும்.

அதுவரையில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் என்று டைட்டிலில் பெயர் போட்டவர்கள் கூட அட இது நமக்கு தோணலியே என்று யோசிக்க வைத்தார்.

சப்பாணி, மயில், பரட்டையன், குருவம்மா அனைவரும் அவர்களாகவே வாழ்ந்தார்கள்.

'இது எப்படி இருக்கு' ரசிகர்களிடம் கேட்டார்.

'பத்த வச்சிட்டியே பரட்டை' - நல்லா உத்துப்பார்த்தா

'டே...கோமுட்டி தலையா...' என்று செந்திலை எட்டி உதைக்கும் கவுண்டமணி.

'என்ன புரிஞ்சுதா..என்ன புரிஞ்சுதோ...என்னமோ...' சொல்லும் கிராமத்து வைத்தியர் யாருன்னா..

'இ லோகத்தில் யோக்கியன்னு ஒரு ஆள் உண்டெங்கில் அது இ பாலக்காட்டு மாதவனாக்கும்..' என்று சொன்ன பாக்கியராஜ்.

முதல் படத்திலேயே பல ஜாம்பவான்கள் நடித்து அமர்க்களப்படுத்தினார்கள்.

காரணமானவர் அவர்தான்.

இந்த படத்திற்கு விகடன் கொடுத்த மார்க் 62.5.

இன்றளவும் இதுதான் முதலிடம்.

இதை ஜெயிக்க இன்னொரு படம் வருமா...?

சரி முதல் படத்தில் அறிமுக நடிகர்களை வைத்து ஜெயித்தார்.

கிழக்கு சீமையிலே

இரண்டாவது படத்தில்...

முற்றிலும் புதுமுகங்கள்.

காதல் கதை...

அருமையான பாடல்கள்.

காதலுக்கு தூதாக ரயிலையும் அறிமுகப்படுத்தினார்.

பரஞ்சோதி, பாஞ்சாலி, பட்டாளத்தான் இந்த

படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள்.

படம் சூப்பர் ஹிட்.

இரண்டாவது படத்தில் மிக மிக உயரத்துக்கு சென்றார்.

கிராமம் தாண்டி நகரம் சென்று திரில்லிங்கான 'சிகப்பு ரோஜாக்கள்' தந்தார்.

'நத்திங்...நத்திங்..'

NOTHING NEW TO ME என்று சொல்லாமல் சொன்னார்.

இயக்குநர் இமயம்என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

காதலுக்கு என்றும் முதல் மரியாதை தந்தவர் இவர்தான்.

'தம்தன தம்தன தாளம் வரும்..' பாடல்

'அண்ணலும் நோக்கினான்...அவளும் நோக்கினாள்...' என்று இலக்கிய நயமாக சொன்னவர்களும் அந்த பாடலை பாட யோசிக்க வைத்தார்.

இன்றும் காதலின் முன்னுரை அதுவே.

'பூவை பறித்தால் மட்டும் வாடாது...செடியிலே விட்டு வச்சாலும் வாடிடும்...' என்ற புதிய சிந்தனையை

புதிய வார்ப்புகளில் சொன்னார்.

கை வீசம்மா கை வீசு தான் அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

கிழக்கு சீமையிலே யும் அதற்கு சமமாக ஒரு அண்ணன் தங்கை இருந்ததை பார்த்தோம்.

அழகான நீரோடை.

அதில் மரங்களில் இருந்து விழுந்து மிதக்கும் பூக்கள்.

பயணிக்கும் வாத்துகள்.

மேற்கு தொடர்ச்சி மலை.

அதை தொட்டுச் செல்ல பறந்து செல்லும் பறவைகள்.

வெறும் வசனங்களால் காட்சிகளை நகர்த்தாமல், கண்ணான கண்ணனின் ஒளிப்பதிவு மூலம் கதையை தொடர்ந்து கொண்டு சென்றார்.

முதல் மரியாதை படத்தில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும்

நடிகர் திலகம் அவர்களை ராதா பார்க்க வரும் போது..

அவர் கால் அந்த ஊரில் படும் போது

நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படுமே...

அந்த ஒரு காட்சி...

பக்கம் பக்கமா பேசும் வசனங்களை விட அற்புதமாக இருந்தது.

வேதம் புதிது படத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றில் சரிதா அமலாவிடம் 'தாயி இங்கிட்டு ஒரு கோலம் போடு...' என்று சொல்லும் காட்சியில் அமலா கோலம் போடும் போது புல்லாங்குழல் கலந்து ஒரு பின்னணி இசை வரும்.

காதில் ரம்மியமாக அது ஒலிக்கும்.

நாயகனுக்குள் காதல் அரும்பும்.

'கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா' என்று பாடச் சொல்லும்.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட அந்த படத்தில் இப்படி ஒரு காதல் காட்சி இருக்கும்.

காதல் ஓவியம் படம் தோல்வி அடைந்திருக்கலாம்.

ஆனால் அந்த படத்தின் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

'நதியில் ஆடும் பூவனம், வெள்ளிச்சலைங்கைகள் கொண்ட கலைமகள், என் நாதமே வா..'

இந்த பாடல்கள் மீண்டும் எதாவது ஒரு படத்தில் இடம்பெற வேண்டும் என்பது எனது கனவு.

இந்த உலகம் முழுவதும் தினமும் 'ஆயிரம் மலர்களே மலருங்கள்' என்று வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

காதலர்கள் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்' என்று பாடி கொண்டே இருப்பார்கள்.

ஏதோ வாழ்ந்து கொண்டு இருக்கேன் என்று சொல்பவர்கள் 'பூங்காற்று திரும்புமா' கேட்டு ஆறுதல் அடைவார்கள்.

இவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்து ஒலிக்கும் 'என் இனிய தமிழ் மக்களே' குரல்.

"இதயம் போகுதே எனையே பிரிந்தே..." என்று

கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் எழுதினார்.

சத்தியமான வார்த்தைகள்.

இறுதி வரிகளில் 'நிழல் போல உன்னோடு நான் சங்கமம்...தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்' என்று முடித்திருப்பார்.

அவரின் நிழல் நம் அருகில்தான் உள்ளது.

காதலர்களுக்கு குங்குமமாக அவர் வாழ்வார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User