மிதுன் விவகாரம்: “எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறுதான்” - அதிமுக ராஜ் சத்யன்
`அதிமுக இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கொண்டு வர வேண்டும்' என்ற கோரிக்கை கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள ராஜ் சத்யன், “அரசியலில் இல்லாதவர்களையும், கழகப் பொதுச்செயலாளரின் குடும்பத்தினரையும் தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. கழகத்திற்கு எதிரான ஒரு ‘நேரேட்டிவ்’ உருவாக்கப்படுவதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் தொடங்கிய இந்த விவாதம் தற்போது பத்திரிகைகள் மற்றும் ஊடக விவாதங்களுக்கும் பரவியிருப்பது வேதனைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பின்னடைவு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உட்கட்சி நிகழ்வுகள் மற்றும் கழகத் தொண்டர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைகள் என பல்வேறு சவால்களை கட்சியினர் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் அது தவறுதான்” என்று தனது பதிவில் ராஜ் சத்யன் வலியுறுத்தியுள்ளார்.
மிதுனை ஐடி விங் செயலாளராக நியமிக்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் பலர் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான் என்ற ராஜ் சத்யனின் கருத்து கவனம் பெற்றுள்ளது. !

What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)