LSG vs CSK: 'போய் வாடா...' - சென்னையின் Playoff கனவு இனி 'திக்.. திக்..' தான்! எப்படி வென்றது லக்னோ?

May 16, 2026 - 11:00
0
LSG vs CSK: 'போய் வாடா...' - சென்னையின் Playoff கனவு இனி 'திக்.. திக்..' தான்! எப்படி வென்றது லக்னோ?

ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வருவதற்குச் சாதகமாக விளையாடி கொண்டிருக்கும்போது,சென்னை அணி மட்டும், "நீங்கள் எவ்வளவு உதவினாலும் நாங்கள் 6 அல்லது 7வது இடத்திலேயேதான் இருப்போம்" என வீம்புடன் விளையாடி வருகிறது.

LSG vs CSK
LSG vs CSK

மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யலாம் என இருந்த நிலையில், நேற்று லக்னோ அணிக்கு எதிராக விளையாடியது சென்னை அணி. டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தார் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்.

இந்தச் சீசனில் சென்னை அணியில் எது மாறினாலும் பவர் பிளேவில் கெய்க்வாட் விக்கெட் விடுவது மட்டும் மாறவே இல்லை, ஆகாஷ் சிங் பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார்.

நடுவர்கள் போட்டியின் ஆரம்பத்தில் களத்தில் இறங்கும் பேட்ஸ்மேன்களிடம் பேட்டின் அளவு சரியாக இருக்கிறதா எனப் பரிசோதிப்பது போல், வீரர்களின் பேண்ட் பாக்கெட்டில் ஏதாவது துண்டு சீட்டு வைத்திருக்கிறார்களா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். அடிக்கடி எழுதி வைத்ததை எடுத்து எடுத்து காட்டுகிறார்கள்.

LSG
LSG

சஞ்சு சாம்சன் அடிப்பார் என எதிர்பார்த்து காத்திருக்க அவரும் 20(20) ரன்களில் அவுட் ஆக, கடந்த போட்டியில் அதிரடி காட்டிய உர்வில் பட்டேல் நான் சேப்பாக்கத்தில் மட்டும்தான் அடிப்பேன் என வந்த வேகத்தில் கிளம்பினார். அவ்வளவுதான் எனச் சென்னை ரசிகர்கள் தலையில் துண்டை போட கார்த்திக் சர்மா மற்றும் பிரேவிஸ் இணையினர் அதிரடி காட்டி, பாதாளத்தில் கிடந்த போட்டியை மீட்டு வந்தனர்.

அடுத்தடுத்து அவர்களும் அவுட் ஆகி வெளியேற ஷிவம் துபே வந்து வழக்கம் போல டெஸ்ட் மேட்ச் விளையாட ஆரம்பிதார். ஆனால் கடைசி ஒரு ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 187 என்ற நிலைக்கி உயர்தினார்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய லக்னோவின் தொடக்க ஆட்டகாரர்கள், கடந்த போட்டியில் எங்கு விட்டார்களோ அங்கிருந்தே தொடர்ந்தார்கள்.

கடந்த போட்டியில் ஜோஷ் இங்கிலிஷ், இந்தப் போட்டியில் மிச்சல் மார்ஷ்.

CSK
CSK

சென்னை அணியின் பந்து வீச்சுகளை அனைத்து ஸ்டாண்ட்களிலும் பறக்க விட்டு கொண்டிருந்தனர் லக்னோவின் ஓப்பனர்கள். 12வது ஓவரில்தான் கிடைத்தது அவர்களின் விக்கெட். முதல் விக்கெட் விழுவதற்குள் போட்டியே முடிந்து விட்டது, 188 என்ற இலக்கை 17வது ஓவரிலே எட்டி, சென்னையின் பிளே ஆப் கனவையும் சேர்த்து கிட்டத்தட்ட பறித்து விட்டது லக்னோ. புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்திற்கு நகர்ந்திருக்கிறது சென்னை அணி.

இனி வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் கனவு என இருக்கையில் அந்த இரண்டு போட்டியும் பீக்கில் இருக்கும் ஹைதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிரே என நினைக்கும்போது பிளே ஆப் கனவை அடியோடு மறந்து அடுத்த சீசனிற்கு தயாராக சென்று விட்டனர் சென்னை ரசிகர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User