கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

May 16, 2026 - 11:00
0
கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ எடுத்து, அம்மாணவியின் தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்ட 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி வீட்டுக்கு அருகில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் குடும்பமும் வசித்து வந்தது.

அங்கு அடிக்கடி வந்த அம்மாணவனின் நண்பர்கள் இருவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்த மாணவியைத் தப்பான நோக்கத்தில் பார்த்து வந்த நிலையில், அம்மாணவியின் இன்ஸ்டா ஐடியைக் கண்டுபிடித்து அவரின் போட்டோக்களை டவுன் லோடு செய்துள்ளனர்.

பின்பு போலி பெயரில் ஒரு இன்ஸ்டா ஐடியை இவர்கள் உருவாக்கி, அந்த மாணவிக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளனர். அவர் அக்சப்ட் பண்ணியதும் டவுன்லோட் செய்து வைத்திருந்த மாணவியின் போட்டோக்களை, ஆபாசமாக மார்பிங் செய்து அவரின் இன்ஸ்டா ஐடிக்கு அனுப்ப அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.

'இந்தப் படங்களை மற்ற சோஷியல் மீடியாவில் பகிராமல் இருக்க வேண்டுமென்றால் ஆடையின்றி போட்டோ, வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்' என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன மாணவியும் அவர்கள் சொன்னதுபோல் நிர்வாணமாக படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார்.

உடனே அந்தப் படங்களை அம்மாணவியின் தந்தையின் வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பி, 'பத்து லட்சம் பணம் வேண்டும், இல்லையென்றால் சோஷியல் மீடியாவில் பகிர்வோம்' என்று 3 மாணவர்களும் மிரட்டியுள்ளனர்.

போக்சோ
போக்சோ

சுதாரித்த மாணவியின் தந்தை, தனக்கு படங்கள் அனுப்பிய மொபைல் எண் குறித்து விசாரித்தபோது, அது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாணவனின் எண் என்பது தெரிய வந்தது. அதோடு அவனைப் பிடித்து விசாரிக்க, தன் நண்பர்களுடன் சேர்ந்து இதைச் செய்ததாக ஒப்புக்கொள்ள, உடனே கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவிகளில் 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

பள்ளியில் படிக்கும் வயதில் இந்த மாணவர்களின் கிரைம் நடவடிக்கை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User