Kiara Advani: " 'டாக்சிக்' படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்தன!" - கியாரா அத்வானி

Nov 12, 2026 - 12:00
0
Kiara Advani: " 'டாக்சிக்' படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் ஏமாற்றத்தை அளித்தன!" - கியாரா அத்வானி

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அந்தப் படத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் கியாரா அத்வானியின் காட்சிகள் சிலவும் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டன.

Toxic Movie Poster
Toxic Movie Poster

'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் கலந்துகொண்ட கியாரா, படத்திற்கும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் கிடைத்த விமர்சனம் குறித்தும், அதற்கு சித்தார்த் மல்ஹோத்ராவின் ரியாக்ஷன் குறித்தும் பேசியிருக்கிறார்.

சமூக வலைதள ட்ரோல்கள் குறித்துத் பேசிய கியாரா, "இந்த விமர்சனங்களை என் கணவர் சித்தார்த் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

அவர் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. ஒருபோதும் அதைப் பற்றி என்னிடம் பேசியது கூட கிடையாது. எங்களுக்குள் இது ஒரு விவாதப் பொருளாகவே மாறவில்லை.

அவரை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவருடைய இந்தப் பக்குவம்தான் எனக்கும் மிகப்பெரிய பலமாக இருந்தது. இது பல தசாப்தங்களாகத் திரையுலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

Actress Kiara Advani
Actress Kiara Advani

ஐஸ்வர்யா ராய் தொடங்கி பல திறமையான நடிகைகள் இதை எதிர்கொண்டுள்ளனர். அதனால், என் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை.

'டாக்ஸிக்' திரைப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததும், எதிர்பார்த்த வசூல் கிடைக்காததும் ஆரம்பத்தில் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் அளித்தது" எனப் பகிர்ந்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User