Karuppu: 'ஒரு அண்ணனா சொல்றேன், இந்த வயசை மிஸ் பண்ணாதீங்க.!' - சூர்யா

May 13, 2026 - 16:31
0
Karuppu: 'ஒரு அண்ணனா சொல்றேன், இந்த வயசை மிஸ் பண்ணாதீங்க.!' - சூர்யா

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் மே 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று (மே. 12) கேரளாவில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, "கடந்த 5 ஆண்டுகளில் நான் நடித்த படங்களிலிருந்து இது மிகவும் வித்தியாசமான படம். முதல் பாதி உணர்ச்சிப்பூர்வமான பயணமாக இருக்கும்.

கருப்பு படம்
கருப்பு படம்

இரண்டாம் பாதி முழுக்க தியேட்டர் மொமென்ட்டுகளால் நிரம்பி இருக்கும். மே 14ஆம் தேதி மீண்டும் உங்கள் அன்பை பெறுவோம் என்று நம்புகிறேன்.

நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நானும் நீங்கள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஒரு அண்ணனாக சொல்கிறேன் இந்த வயதை மிஸ் பண்ணாதீர்கள். பெரிய கனவு காணுங்கள் எல்லாமே நிச்சயம் நனவாகும்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User